3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு.pptx

arulmozhivalavantass 971 views 38 slides Oct 18, 2022
Slide 1
Slide 1 of 38
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8
Slide 9
9
Slide 10
10
Slide 11
11
Slide 12
12
Slide 13
13
Slide 14
14
Slide 15
15
Slide 16
16
Slide 17
17
Slide 18
18
Slide 19
19
Slide 20
20
Slide 21
21
Slide 22
22
Slide 23
23
Slide 24
24
Slide 25
25
Slide 26
26
Slide 27
27
Slide 28
28
Slide 29
29
Slide 30
30
Slide 31
31
Slide 32
32
Slide 33
33
Slide 34
34
Slide 35
35
Slide 36
36
Slide 37
37
Slide 38
38

About This Presentation

Dr.T.ARULMOZHIVALAVAN,
M.Sc., M.Phil., SET.(Life Sci.), M.Sc.(Psy), M.Ed., NET.(Edu), PGDCA., Ph.D.(Education), (Ph.D. Zoology,)
Assistant Professor of Education,
Marudupandiyar College of Education,
Thanjavur - 613403
Mobile No: 9843074563
[email protected]


Slide Content

CHILDHOOD AND GROWING UP Unit – 3 குழந்தை வளர்ச்சியின் கோட்பாடுகள் Theories of child development 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு (Jean Piaget’s Theory of Stages Cognitive Development) 1 Dr.T.ARULMOZHIVALAVAN , M.Sc., M.Phil., SET.(Life Sci.), M.Sc.( Psy ), M.Ed., NET.( Edu ), PGDCA., Ph.D .(Education), (Ph.D. Zoology,) Assistant Professor of Education, Marudupandiyar College of Education, Thanjavur - 613403 Mobile No: 9843074563 [email protected]

2 அலகு : III குழந்தை வளர்சிக் கோட்பாடுகள் Unit : III Theories of child development   3.1 எரிக்சனின் உள சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் Psycho-social stages (Erikson), 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு Cognitive development (Piaget), 3.3 கோல்பெர்கின் நல்லொழுக்க வளர்ச்சி கோட்பாடு Moral development (Kohlberg), 3.5. அறிதிறன் வளர்ச்சிக்கு விகாட்ஸ்கியி-ன் சமூக பண்பாட்டு அணுகுமுறை Socio-cultural approach to cognitive development ( Vygotsky ), 3.6 ப்ரான்ஃபென் பெர்ன்னரின் சுற்றுச்சூழல் கோட்பாடு Ecological systems theory ( Bronfenbrenner).

3 அலகு : III குழந்தை வளர்சிக் கோட்பாடுகள் Unit : III Theories of child development  

4 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) ஜீன் பியாஜே என்னும் உளவியல் அறிஞர் தனது மூன்று குழந்தைகளை உற்றுநோக்கி எவ்வாறு அறிவுப் புல வளர்ச்சி நடைபெறுகிறது என்பதை சோதித்து அறிந்தார் . அந்த முடிவுகளை வைத்து பின்னர் வேவ்வேறு குழந்தைகளிடம் ஆய்வுசெய்து அறிவுவளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது என்பதை உற்று நோக்கினார் . அவற்றின் பின்னர் முடிவுகளைப் புத்தகங்களாகவும் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டார் . மிகச் சிறந்த அறிவியலாளராக அவர் கருதப்பட்டார். ஜீன் பியாஜேயின் கருத்துப்படி ‘குழந்தை தன்னுடைய அனுபவங்களை முறையாக ஒருங்கிணைத்து இணக்கமான நடத்தையை பெற உதவும் கருவியே நுண்ணறிவாகும்’ என்றார்.

5 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) ‘நெய்சா’ என்ற அறிஞரின் கருத்துப்படி ‘புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கியமைத்தல் , விரிவுப்படுத்தல், நினைவு கூர்தல் என்ற உளச் செயல்களின் அடிப்படையில் ஆராய்ந்து, அவை பற்றி அறிந்து கொள்ளுதல் ‘அறிதிறன்’ எனப்படும்’. வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச்செயல்களே “அறிதிறன்செயல்கள்" எனப்படும் . இத்தகைய அறிதிறன் செயல்கள் அனைத்தும் நமது புலன்காட்சி, கவனம், சிந்தனை, ஆராய்ந்தறிதல் பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காணல், நினைவு ஆகிய செயல்களுக்கு அடிப்படையாக அமைகிறது.

6 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) அறிதிறன் வளர்ச்சி : சுவிட்ஸர்லாந்து நாட்டு அறிஞரான ஜீன் பியாஜே என்பாரது கருத்துப்படி, ‘ அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மற்றுமின்றி வரிசைக்கிரமமாக அமைந்த பல படிநிலைகளில் நிகழ்கிறது. இவ்வாறு படிப்படியாக ஏற்படும் வளர்ச்சியானது நான்கு வளர்ச்சி நிலைகளாகவும் , அவற்றிற்கு உரித்தான நடத்தை மாற்றங்களைக் கொண்டதாகவும் அமைகிறது. ’ அறிதிறன் வளர்ச்சியில் இவ்வொவ்வொரு வளர்ச்சி நிலையினையும் குழந்தை கடக்க வேண்டும். பியாஜேயின் கருத்துப்படி, ‘ குழந்தை தன்னுடைய அனுபவங்களை முறையாக ஒருங்கமைத்து இணக்கமான நடத்தையைப் பெற உதவும் கருவியே நுண்ணறிவாகும். ஒரு குழந்தையின் நுண்ணறிவின் அளவு எல்லாப் படிநிலைகளிலும் மாறாமல் இருந்தாலும் கூட நுண்ணறிவின் செயல்பாடு மூலம் அதன் கட்டமைப்பின் தன்மை மாறுதலடைகின்றது. ’

7 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) ஒருங்கமைத்தலும் ( Organisation ) , இணக்கமும் (Adaptation) மனிதனிடம் இயல்பாகவே இரு அடிப்படைப் போக்குகள் இருப்பதாக பியாஜே கருதுகிறார். இவை ஒருங்கமைத்தல் (Organisation) மற்றும் இணங்குதல் (Adaptation) என்பனவாகும். இவ்விரு போக்குகளுக்கும் இடையே ‘சம நிலைப்படுத்தும் செயல்முறை’ (equilibrium) உதவுகிறது. ஒருங்கமைத்தல், இணங்குதல் ஆகியன சேர்ந்து, பெறப்படும் அனுபவங்களைப் பிரித்து உணர்ந்தும், தொகுத்துணர்ந்தும் அறிவினைப் பெற குழந்தைகளுக்கு உதவுகின்றன. இணங்குதலின் பொருத்துதல் (accommodation), தன்வயப்படுத்துதல் (assimilation) ஆகியனக் காணப்படுகின்றன. குழந்தை வளர்ச்சி அடைய, அடைய, சூழ்நிலையினின்றும் அது பெறும் அனுபவங்கள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன? எவ்வாறு இணக்கம் பெறுகின்றன? என்பவை அக்குழந்தையின் அப்போதைய வளர்ச்சி நிலையைப் பொறுத்தது . ஆனால் எந்த நேரத்திலும் அறிதல் வளர்ச்சியின் அடிப்படை ஒருங்கமைத்தலும், இணங்குதலுமாகும். இவற்றை “மாறாச் செயல்கூறுகள்" (functional invariants) என்று பியாஜே குறிப்பிடுகிறார்.

8 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) எடுத்துக்காட்டு: பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் உணவாக அளிக்கப்படுகிறது. ஏனெனில் அதன் ஜீரண அமைப்பு பாலை மட்டும் கிரகித்துக் கொள்ளும் தன்மை படைத்தது . சில மாதங்களுக்குப் பிறகு, சிறிது சிறிதாக கூழ், மசித்த காய்கறிகள் போன்ற திட உணவுப் பொருட்கள் குழந்தைக்குக் கொடுக்கப்படும் போது, சமநிலை பிறழ்வு ஏற்படும் , வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும். ஆனால் சில நாட்களிலேயே இது நின்று போய் திட உணவுப் பொருட்களையும் ஜீரணிக்கும் வகையில் அதன் ஜீரண அமைப்பு மாற்றமடைகிறது. இதே போன்று குழந்தையின் அறிதிறன் கட்டமைப்பும், தான் எதிர்கொள்ளும் சிக்கலான கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொள்ளும் வகையில் மாற்றமடைந்து கொண்டேயிருப்பதாக பியாஜே கருதுகிறார். இவ்வாறு அறிதிறன் கட்டமைப்பு மாற்றமடைவதாலேயே குழந்தையின் அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது. எனவே அறிதிறன் வளர்ச்சி என்பது அறிந்திருக்கும் பொருட்களின் அளவு அல்லது எண்ணிக்கைப் பெருக்கம் மட்டுமல்ல, ஆராய்ந்து அறியும் முறையிலேயே பெருத்த மாற்றங்களையும் பெறுவது ஆகும்.

9 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) அறிதிறன் கட்டமைப்பு (structure of cognition) ( i ) ஒருங்கமைத்தல் (Organisation) ( ii) இணங்குதல் (Adaptation) 1) பொருத்துதல் (accommodation) 2) தன்வயப்படுத்துதல் (assimilation) (உ-ம்) பார்த்தல், பற்றுதல் என்னும் இரண்டு உடல்திறன்களைப் பெற்றபின், அவற்றை முறையாக இணைத்து தான் பார்த்த பொருளை பொறுக்கி எடுத்தல் என்ற உயர் செய்திறனைப் பெறுதல்

10 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை; உடல் ரீதீயாகவோ அல்லது மன ரீதீயாகவோ கையாள வேண்டும். இவ்வகைச் செயல்களின் தொகுப்பை ‘ஸ்கீமா’ என்று பியாஜே அழைக்கிறர். அறிதிறன் வளர்ச்சி அடைய ‘ஸ்கீமா’ உடலியக்க சார்பு நிலையில் இருந்து கருத்தியல் (abstraction) நிலைக்கு மெல்ல மெல்ல மாறுகிறது. (உ-ம்) சிறு குழந்தைகளுக்குக் கிரிக்கெட் தானே விளையாடினால் மகிழ்ச்சி அல்லது இன்பம் ஏற்படும். ஆனால் வயது வந்தவர்களுக்கு அதே விளையாட்டை தொலைக்காட்சி வழியே பார்த்தாலே இன்பம் கிடைக்கும். ஸ்கீமா உருப்பெறும் தன்மைக்கு ஏற்ப குழந்தையின் அறிதிறன் வளர்ச்சி நிலைகளாக கீழ்க்கண்டவற்றை பியாஜே குறிப்பிடுகிறார் 1) புலன் இயக்க நிலை (0 முதல் 2 வயது வரை) 2) செயலுக்கு முற்பட்டநிலை (2 முதல் 7 வயது வரை) 3) புலனீடான செயல்நிலை அல்லது பருப்பொருள் நிலை (7 முதல் 11 வயது வரை) 4) கருத்தியல் நிலை (11 வயதுக்கு மேல்)

11 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 1) புலன் இயக்க நிலை (sensory motor stage) (0 முதல் 2 வயது வரை) 2) செயலுக்கு முற்பட்டநிலை (pre opratioal stage) (2 முதல் 7 வயது வரை) 3) புலனீடான செயல்நிலை அல்லது பருப்பொருள் நிலை (concrete opratioal stage) (7 முதல் 11 வயது வரை) 4) கருத்தியல் நிலை (formal oprational stage) (11 வயதுக்கு மேல்)

12 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development )

13 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) Mnemonics : Sensitive – police, constable, force (SMS to PCF)

14 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 1. புலன் இயக்க நிலை (Sensory Motor Stage) 0 முதல் 2 வயது வரை

15 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 1) புலனியக்க நிலை ( Sensory Motor Stage) பிறப்பு முதல் 2 ஆண்டுகள் வரை. பிறந்த குழந்தை 4 மாதம் வரை பார்த்தல், சூப்புதல், பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. பொருட்கள் அல்லது நிகழ்வுகளுக்காக குறியீடுகளையோ (signal) அல்லது சாயல்களையோ (images) குழந்தை கற்றிருக்காது. குழந்தை தனது புலன்களை (sensory organs) பயன்படுத்தி வெளியுலகை அறிகிறது. மொழியை பயன்படுத்தத் தெரியாது. குறியீடுகளை பயன்படுத்தத் தெரியாது. 8 அல்லது 9 மாதங்களின் பொருட்களின் நிலைத்த தன்மை (object performance) பற்றி அறிகிறது. இந்நிலையில் குழந்தை . பல்வேறு பொருட்களின் பண்புகளைத் தனது புலன்களின் வழியேயும் உடலியக்கங்களின் மூலமாகவும் உணர்ந்து புரிந்து கொள்கிறது .

16 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) a) இந்நிலையின் சிறப்பு சூழ்நிலையுடன் புலன்களின் இடை வினை ஆகும். மொழி உதவியின்றி காணப்படும் இந்நிலை உடனடியான, தற்போதைய சூழ்நிலை அனுபவங்களுடன் இணைந்தது. எடுத்துக்காட்டாக 6 மாத குழந்தையிடம் ஒரு வண்ணப்பந்தை நீட்டினால் கைகளையும் கால்களையும் தனித்தனியாக அசைக்க முடியும் என்று அறிந்திருப்பதில்லை . ஆனால் 8 மாத குழந்தை கைகளை மட்டும் கொண்டு பந்தைப் பிடிக்க முயலும். 10 மாதக் குழந்தை பெரிய பந்தானால் இரண்டு கைகளாலும் , சிறிய பந்தை (எலுமிச்சை பழம் போன்றவை) ஒரு கையாலும் பிடிக்க முயலும். அதே போன்று தனது கைகளை எவ்வளவு தூரம் நீட்டினால் விரும்பிய பொருளை எடுக்க முடியும் என்பன போன்ற அறிவையும் குழந்தை பெறுகிறது. b ) மறைக்கப்பட்டவை மறக்கப்படுகின்றன . பிறந்து 10 மாதங்கள் சென்றபின் பொருள்களின் நிலைத்த தன்மை பற்றி குழந்தை அறிகிறது c) அடிப்படை நினைவு தோன்ற ஆரம்பிக்கிறது.

17 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) d) இயல்பூக்க நடத்தையிலிருந்து நோக்க அடிப்படையிலான நடத்தைக்கு குழந்தை மாறுகிறது. e) எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் (curiosity) முயன்று தவறிக் கற்றல் மூலம் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முயலுதலும் இந்நிலையில் காணப்படும். f) தான் வேறு தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் வேறு என்று புரிந்து கொள்வதன் மூலம் தற்கருத்து தோன்ற ஆரம்பிக்கிறது. சுருங்கக் கூறின் புலன் இயக்கநிலையில் குழந்தையின் செயல்பாடு நுண்ணறிவு (practical intelligence), பார்த்தல், (seeing), பற்றுதல் (grasping), உறிஞ்சுதல் (sucking), போன்ற செய்திறன்கள் மூலம் தோன்ற ஆரம்பித்திருப்பதால் தன் உடனடி சூழ்நிலைகளையும் அதில் உள்ள பொருட்களையும் கையாள்வதில் தேர்ச்சி பெறுகிறது. ஆனால் மொழியைப் பயன்படுத்தவோ, குறியீடுகளை உபயோகிக்கும் ஆற்றலையோ பெற்றிருக்காது.

18 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) d) இயல்பூக்க நடத்தையிலிருந்து நோக்க அடிப்படையிலான நடத்தைக்கு குழந்தை மாறுகிறது. e) எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் (curiosity) முயன்று தவறிக் கற்றல் மூலம் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முயலுதலும் இந்நிலையில் காணப்படும். f) தான் வேறு தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் வேறு என்று புரிந்து கொள்வதன் மூலம் தற்கருத்து தோன்ற ஆரம்பிக்கிறது. சுருங்கக் கூறின் புலன் இயக்கநிலையில் குழந்தையின் செயல்பாடு நுண்ணறிவு (practical intelligence), பார்த்தல், (seeing), பற்றுதல் (grasping), உறிஞ்சுதல் (sucking), போன்ற செய்திறன்கள் மூலம் தோன்ற ஆரம்பித்திருப்பதால் தன் உடனடி சூழ்நிலைகளையும் அதில் உள்ள பொருட்களையும் கையாள்வதில் தேர்ச்சி பெறுகிறது. ஆனால் மொழியைப் பயன்படுத்தவோ, குறியீடுகளை உபயோகிக்கும் ஆற்றலையோ பெற்றிருக்காது.

19 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 2. செயலுக்கு முற்பட்ட நிலை (Pre-Operational Stage) 2 முதல் 7 ஆண்டுகள் வரை

20 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 2. செயலுக்கு முற்பட்ட நிலை ( Pre-operational Stage) 2 முதல் 7 ஆண்டுகள் வரை. உடனடியாக பல தூண்டல்கள் மட்டுமின்றி , முன்பு அனுபவித்தவை பற்றிய சாயல்களும் ( images ) அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தை மொழியை ஓரளவு பயன்படுத்தத் துவங்குகிறது. தனித் தேவைகளை மையமாக ( ego centric ) கொண்டு சொற்களுக்கு பொருள் காணுதல் உயிரற்ற ஜடப்பொருள்களையும் ( animism ) உயிருள்ளவைகளாக பாவித்தல் பொருள்களில் அளவு மாறாத் தன்மை உணரப்படாது. தாய் தந்தையரின் சர்வ வல்லமை படைத்தவர்களாகவும் ( omnipotent) எங்கும் நிறைந்து இருப்பவர்களாகவும் ( omnipresent) கருதுகின்றனர். ( omnipotent - having unlimited power. ( omnipresent) widely or constantly encountered, widespread / present everywhere at the same time. விதிகளை முழுமையாக பின்பற்றி எந்த விளையாட்டையும் விளையாடத் தெரியாது.

21 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 2. செயலுக்கு முற்பட்ட நிலை ( Pre-operational Stage) முன்பின் மாற்றம் இருக்காது இந்த பிரிவின் மற்ற இரு பிரிவுகள் 1) முன் கருத்து உருவாதல் நிலை: 2 முதல் 4 ஆண்டுகள் வரை உளக்குறியீடுகளை உணருகிறது இதனை பியாஜே குறியீடுகள் எனக் குறிப்பிடுகிறார். 2) உள்ளுணர்வு நிலை: 4 முதல் 7 ஆண்டுகள் வரை ஒரு சமயத்தில் ஒரு பொருளின் ஒரு பண்பினை மட்டும் அறிதல் பொம்மைகளை உண்மையானவை என உணர்தல்.

22 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 2. செயலுக்கு முற்பட்ட நிலை ( Pre-operational Stage) அனுபவப் பொருட்களின் ஒரு பண்பினை மட்டுமே ஒரு சமயத்தில் குழந்தையால் உணரவியலும் எனவே பொருட்கள் உருவம், இடம் மாறினாலும் அவற்றின் அளவு குறையாது என்னும் கருத்து உணரப்படாது. A, B என்னும் இரு ஒரே மாதிரியான ஒரே அளவுள்ள ஜாடிகளில் ஓரேயளவு நீர் இருப்பதைப் பார்த்து, இரண்டிலும் உள்ள நீர் ஒரே அளவானவை என்று ஒப்புக் கொள்ளும் குழந்தை, B யிலுள்ள நீரை சிந்தாமல் சிதறாமல் C என்னும் வாயகன்ற ஜாடிக்கு மாற்றிவுடன் C யில், B யை விட நீர் குறைவாக இருக்கிறது என்று கூறும் நீர் உயரத்தை மட்டும் உணரும் குழந்தை அகலத்தைக் கணக்கில் கொள்வதில்லை. திரும்பவும் C யிலிருந்து B க்கு மாற்றினால், A யும் B யும் சமம் என்று கூறும். இந்நிலையிலுள்ள குழந்தைகளின் சிந்தனையில் நெகிழ்ச்சி காணப்படாது . முன்பின் மாற்ற ம் (Reversibility) இருக்காது. (உ.ம்) உன் பின்னால் என்ன இருக்கிறது? நாய் இருக்கிறது என்று பதில் சொல்லும் குழந்தை நாய்க்கு முன் யார் இருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் திகைக்கும்.

23 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 2. செயலுக்கு முற்பட்ட நிலை ( Pre-operational Stage) பொம்மைகளை உண்மையானவை என உணர்தல். மொழி வளர்ச்சி தொடங்குகிறது. ஆனால் சொற்கள் குழந்தையின் தனித் தேவைகள், பயன்கள் ஆகியவற்றுக் கேற்ப பொருள் கொள்ளப்படுகின்றன. சிறிது சிறிதாகவே சொற்களின் பொருள் உணரப்படுகிறது. பிறரது நோக்கிலிருந்து சிந்திக்க இந்நிலையில் இயலாது. (உ-ம்) சிறு குழந்தைகள் பொம்மைகளை சிறு குழந்தையாக பாவித்து குளிப்பாட்டி உடையணிவித்து, படுக்கையில் தன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள் .

24 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 2. செயலுக்கு முற்பட்ட நிலை ( Pre-operational Stage) முன்பின் மாற்றம் (Reversibility) இருக்காது. (உ.ம்) உன் பின்னால் என்ன இருக்கிறது? நாய் இருக்கிறது என்று பதில் சொல்லும் குழந்தை நாய்க்கு முன் யார் இருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் திகைக்கும். உனக்கு ஒரு அக்கா இருக்கு , அக்காவுக்கு ஒரு தங்கை இருக்கா ?

25 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 3. பருப்பொருள் நிலை ( Concrete Operational Stage) 7 முதல் 12 ஆண்டுகள் வரை

26 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 3.பருப்பொருள் நிலை ( Concrete Operational Stage) 7 முதல் 12 ஆண்டுகள் வரை. குழந்தை பொருள்களின் பல பண்புகளைப் பற்றி ஒரே நேரத்தில் சிந்திக்க முடிகிறது. முன்பின் மாற்றங்களை நன்கு உணர முடிகிறது. வகைப்படுத்தல், வரிசைப்படுத்தல் போன்றவை இடம், காலம் சார்ந்த தொடர்புகளில் திறன் பெற்றாலும் முழு தெளிவு காணப்படாது. எந்த விளையாட்டையும் அதற்குரிய விதிகளைப் பயன்படுத்தி விளையாட முடிகிறது. குற்றங்களை நோக்கத்தின் அடிப்படையில் அல்லாது அவைகளின் அளவின் அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள். சிந்தனையும் அறிதல் திறனும் மேலும் உயர்நிலைப்படும் . எனினும் இவை புலனீடான அளவிலேயே இருக்கும். அதாவது புலன்கள் உதவியின்றி அனுபவங்களை உள்ளத்தால் சிந்திக்க முடிகிறது.

27 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 3.பருப்பொருள் நிலை ( Concrete Operational Stage) ஆனால் பெறப்பட்ட அனுபவங்களுக்கு அப்பால் தனது சிந்தனையைச் செலுத்த இயலாது. அருகிலுள்ள உன் அத்தை வீட்டுக்கு எப்படிப் போக வேண்டும் என்று குழந்தையிடம் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் நம்மை சரியான வழியில் அழைத்துச் சென்று அத்தை வீட்டைக் காண்பிக்கும் திறன் பெற்றிருப்பார்கள். குழந்தையால் பொருட்களின் பல பண்புகள் பற்றி ஒரே நேரத்தில் ( Decentering ) சிந்திக்க முடிகிறது. எனவே பொருட்களின் மாறாத் தன்மையை ( conservation concepts ) அறிது கொள்ள முடிகிறது. வகைப்படுத்துதல், வரிசைப்படுத்துதல் (உருவ அளவுப்படி), இடம், காலம் சார்ந்தவற்றில் திறன் பெற்றாலும் முழுத் தெளிவு காணப்படாது. முன் - பின் மாற்றங்களை ( reversability ) நன்கு உணர முடிகிறது. எந்த விளையாட்டையும் அதற்குரிய விதிகளைப் பின்பற்றி விளையாட முடிகிறது. குற்றங்களை நோக்கத்தின் அடிப்படையில் அல்லது அவற்றின் அளவின் அடிப்படையில் மதிப்பிடுவர்.

28 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 4) கருத்தியல் நிலை ( Formal Operational Stage) 12 ஆண்டுகளுக்கு மேல்

29 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 4) கருத்தியல் நிலை ( Formal Operational Stage) 12 ஆண்டுகளுக்கு மேல். இந்தப் பருவம் குமரப்பருவத் தொடக்கத்தில் எழும். இந்த நிலையில் நேர் எதிரில் இல்லாதவை பற்றியும் புலன் தொடர்பற்றவை பற்றியும் குழந்தையால் சிந்திக்க முடிகிறது. எதிர்கால நிலைமைகளைப் பற்றியும் கற்பனை நிகழ்வுகளைப் பற்றி சிந்திக்க இந்தப்பருவத்தில் முடிகிறது. குற்றங்களை அளவின் அடிப்படையில் மதிப்பிடாமல் குற்றங்களின் பின்னனி, நோக்கத்தைக் கொண்டே மதிப்பிடுவர். எந்தக் குழந்தையும் பிறர் நோக்கிலிருந்து சிந்திக்க முடிகிறது . அல்லது அவற்றின் அளவின் அடிப்படையில் மதிப்பிடுவர். உடனடியான இப்போதைய நிலைமையைக் காட்டிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் கற்பனை நிலமைகள் போன்றவை பற்றியும் சிந்திக்க இயலும். (உ-ம்) உணவு உண்பதற்கு பதில் தேவையான சத்துகளை மாத்திரைகளாக உட்கொண்டு மனிதன் வாழ முடியுமா என்று கேட்டால் இந்நிலையிலுள்ள குழந்தை பதில் சொல்லும் (காரண காரியத்தோடு).

30 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 4) கருத்தியல் நிலை ( Formal Operational Stage) விஞ்ஞானிகளைப் போன்றே செய்ய வேண்டியவை பற்றியும் செய்து முடித்தவை பற்றியும் பதிவு செய்து, பரிசோதனைகள் செய்வார்கள். நிகழ்வுகளுக்கான சாத்தியக் கூறுகள் பற்றிச் சிந்திக்க ஆய்வுக்கான கருதுகோள்களை அமைத்து சோதிக்கும் திறன் பெறுவர். (உ-ம்) நான்கு பாட்டிகளில் உள்ள வண்ணமற்ற திரவங்களில் இரண்டை ஒன்று சேர்த்து பச்சை நிறத்தை உண்டாக்கி பின் அதனுடன் இன்னொரு பாட்டில் திரவத்தைச் சேர்த்து பச்சை நிறத்தை மஞ்சளாக்கி மீதமுள்ள ஒரு பாட்டில் திரவத்தை சேர்க்கும் போது மஞ்சள் நிறம் மறைந்து வண்ணமற்ற தாகிவிடும். இச்சோதனையைக் கருத்தியல் நிலையில் உள்ள குழந்தைகளைச் செய்ய சொன்னால் அவர்கள் அறிவியல் விஞ்ஞானிகள் போன்று நான்கு பாட்டில்களுக்கும் முதலில் A, B, C, D என்று பெயரிடுவர். முதலில் இரண்டு பாட்டில்கள் திரவங்களைச் சேர்க்க வேண்டும் என்பதால் இதற்கான சாத்தியக் கூறுகளாக AB, AC, AD, BC, BD என்று எழுதி வைத்துக் கொண்டு ஒன்றோன்றாக சோதிப்பர். உதாரணமாக AB, AC, AD ஆகிய சேர்க்கை பச்சை நிறத்தைத் தோற்றுவிக்காமல் BC என்ற சேர்க்கை தோற்றுவிப்பதாகக் கொள்வோம் பின்பு BC+D, BC+A என்ற சேர்க்கையை சோதிப்பர். BC+D என்ற சேர்க்கை பச்சை நிறத்தை மஞ்சளாக மாற்றினால் முழுசோதனை வரிசையும் BC+D+A என்று பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடுவர்.

31 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) 4) கருத்தியல் நிலை ( Formal Operational Stage) எந்தவொரு விளையாட்டு அல்லது சமூக அமைப்பின் விதிமுறைகளும் பலர் கூடி ஒப்புக் கொள்வதால் ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்வதால், தேவைக்குத் தகுந்தவாறு விதிமுறைகளை மாற்றியமைக்க முயலுவர்.

32 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) பியாஜேயின் கருத்துகளது கல்வி விளைவுகள் செயலும் பயிற்சியும் அறிதிறன் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை எனவே செயல்மைய கல்வி ஏற்பாடு இன்றியமையாதது. அறிதிறன் வளர்ச்சி நிலைகளைத் துரிதப்படுத்த இயலாது , ஆனால் ஆசிரியர் ஒவ்வொரு நிலை தேர்ச்சியையும் ஊக்குவிக்கத்தக்க அனுபவங்களை அமைத்துத் தரவேண்டும். குழந்தையின் நிலைக்கு ஏற்ற அனுபவங்களைப் பள்ளி தந்து உதவ வேண்டும் . இந்நிலைக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் தரப்பட்டால் அவற்றின் தன்மை உணரப்படாமல் போகலாம் அல்லது அவ்வனுபவங்களினின்றும் நடைமுறைப் பயனுள்ள பொதுப்பண்பு உணரப்படாமல் எளிதில் மறக்கப்படலாம். ஒழுக்க வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் இணைந்தவை. சுமார் 11 வயதில்தான் குழந்தையால் செயலின் பின்னமைந்த நோக்க அடிப்படையில் அதனை மதிப்பிட முடியும். பள்ளி, கல்வி ஏற்பாடு, கற்பித்தல் முறைகள் ஆகியன அறிதிறன் வளர்ச்சி நிலையுடன் இணைக்கப்பட வேண்டும். உதாரணமாக தொடக்கநிலை சிறுவர்களுக்குச் செயல்வழிக் கற்பித்தலும், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குப் படம், மாதிரிப் பொருட்கள், செய்து காட்டல் போன்றவை மூலம் கற்பித்தலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சொற்சார்ந்த கற்பித்தல் முறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்

33 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) பியாஜேயின் கருத்துகளது கல்வி விளைவுகள் : தானே கண்டறியும் முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயல்கள் மாணவர்களின் சுயகற்றலுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும். குழந்தைகளை அளவில் சிறிய முதிர்ந்தவர்களாகப் பாவித்தலாகாது, குழந்தைகளின் சிந்தனையும் செயல்முறைகளும், முதிர்ந்தவர்களின் சிந்தனை, செயல்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையன. குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியில் பாடப்பொருள் அனுபவங்களைப் போன்றே கல்வித் துணைச் செயல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உணரப்பட வேண்டும்.

34 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) பியாஜேயின் கருத்துகளது கல்வி விளைவுகள் : குழந்தையின் அறிவு வளர்ச்சி நிலையை நாம் மாற்றி அமைக்க இயலாது . ஒவ்வொரு நிலையிலும் குழந்தை குழந்தையின் பண்புகளை கவனமாக ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் ஆசிரியர் செயல்பட வேண்டும். குழந்தையின் மன வளர்ச்சிக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். குழந்தையின் வயது நிலைக்கு ஏற்ப கற்றல் அனுபவங்கள் அமைத்துதளூ தரப்பட வேண்டும். குழந்தையின் வளர்ச்சி நிலையில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அறிந்து கொண்டு அவர்களை வழி நடத்திட முடியும். குழந்தையின் கற்றல், அறிதிறன், வளர்ச்சி மற்றும் சூழல் அனுபவங்களால் தீர்மானிக்கப்படுகிறது. சிறப்பான கற்றல் நடைபெற ஆசிரியர் அளிக்கும் அனுபவங்கள் குழந்தையால் உட்கிரகித்துக் கொள்ளும்படி அமைய வேண்டும். உண்மையான கற்றல் குழந்தையிடம் நடைபெற வேண்டும் எனில் பள்ளியிலும் மற்றும் வீட்டிலும் விரும்பத்தக்க சூழல்கள் அமைத்துத் தரப்படுதல் வேண்டும்.

35 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development ) பியாஜேயின் கருத்துகளது கல்வி விளைவுகள் : 4 வயது வரை குழந்தைகளுக்கு அனுபவங்கள் பருப்பொருட்களால் அமைத்துத் தரப்படுதல் வேண்டும். உயர் நிலையில் கற்பித்தலுக்கு மொழியுடன் குறியீடுகளையும் பயன்படுத்த வேண்டும். சில பாடக்கருத்துக்கள் குழந்தை தானே கண்டறியும் முறையில் கற்பிக்கப்படலாம். குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில் பாடச் செயல் திட்டத்துடன் கல்வி இணைமுறைச் செயல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குமரப்பருவ வயதினரிடத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமைகளை வளர்க்க வேண்டும். ஒரு கருத்தை அல்லது பிரச்சினையை வேறொருவரின் நிலையிலிருந்து ஆய்வு செய்திட அவர்களை ஊக்குவிக்க வேண்டும்..

36 3.2 ஜீன்பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு ( Jean Piaget’s Theory of Stages Cognitive Development )

37

38 அடுத்த வகுப்பில் அலகு : III குழந்தை வளர்சிக் கோட்பாடுகள் Unit : III Theories of child development Moral development (Kohlberg), Socio-cultural approach to cognitive development ( Vygotsky ), Ecological systems theory ( Bronfenbrenner).