Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)

4,056 views 22 slides Aug 25, 2020
Slide 1
Slide 1 of 22
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8
Slide 9
9
Slide 10
10
Slide 11
11
Slide 12
12
Slide 13
13
Slide 14
14
Slide 15
15
Slide 16
16
Slide 17
17
Slide 18
18
Slide 19
19
Slide 20
20
Slide 21
21
Slide 22
22

About This Presentation

பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் இரண்டாமாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கான மணிமேகலை - சிறைக்கோட...


Slide Content

முனைவர் மு.புஷ்பரெஜினா உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை , பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி , தஞ்சாவூர் . மணிமேகலை - அறிமுகம் [email protected] [email protected] https://pushpargn.blogspot.com/ பகுதி 1 பொதுத்தமிழ் இரண்டாமாண்டு - மூன்றாம் பருவம் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி , தஞ்சாவூர் . தாள் – மூன்று – காப்பியமும் நாடகமும்

மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று இரட்டைக்காப்பியம் என்று அழைக்கப்படும் . மணிமேகலை நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது . மணிமேகலையின் காலம் சோ.ந. கந்தசாமி பொ.ஆ. 450 - பொ.ஆ. 550 பாவ்லா ரிச்மேன் - ஆறாம் நூற்றாண்டு எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்  - ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது மணிமேகலை என்னும் காப்பியம் புத்த சமயக் கொள்கைப் பரப்பு நூலாகும்.

சீத்தலைச் சாத்தனார் மதுரையில் வாழ்ந்தவர் என்றும் ( கூலம் ) தானிய வணிகம் செய்தவர்  . சீத்தலை என்ற ஊரில் பிறந்தவராக இருந்திருக்கக் கூடும் . புத்த சமயக் கொள்கையைக் கொண்டிருந்த 'சாது' (சாத்து) என்பதாலோ 'சாத்து' என்கிற வணிக தலைவராக இருந்ததாலோ சாத்தன் என அழைக்கப்பட்டிருக்கிறார் . இவர் 'மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன் ' என அழைக்கப்படுகிறார் . இவர்  பௌத்த சமயத்தைச்  சேர்ந்தவர் . இளங்கோவடிகள் , சீத்தலைச் சாத்தனாரின் மிக நெருங்கிய நண்பராக இருந்ததாக அறியப்படுகிறது. சீத்தலைச் சாத்தனார் 'நன்னூற் புலவன்', 'தண்டமிழ்ச் சாத்தன்' என்று போற்றப்படுகிறார்.

மணிமேகலை கதை காப்பியத்தின் தலைவி, மணிமேகலை சிலப்பதிகார கோவலன் , மாதவி என்பவர்களின் மகளாவாள் . மணிமேகலையைக் கோவலனின் குலவாரிசாகவே கருதினர் . கோவலன் , கண்ணகியின் மறைவிற்குப் பிறகு செல்வம் அனைத்தையும் போதிமரத்தினடியில் அறவண அடிகள் முன் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள் . ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று , முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள் . மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவிற்கு அழைத்துச் சென்று அவளின் முற்பிறவியின் ரகசியத்தை எடுத்துரைத்தது . கோமுகிப் பொய்கையிலிருந்து ஆபுத்திரன் வைத்திருந்த அட்சயப் பாத்திரத்தைப் பெற்றாள் . தீவத்திலகை மூலமாக ஆபுத்திரன் வரலாற்றை அறிந்தாள் .

மணிமேகலை - கதை

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை சித்திரத்தில் அமைந்த தெய்வம் கூறல் வியப்பும் நீங்கலும் பெருமூச்சுடன் சென்றான் காயசண்டிகையின் உருவில் உணவளித்தாள் சான்றோர் வழி நடந்தாள் சிறையகம் சேர்ந்தாள் அமுதசுரபியின் கொடைத்திறம் பூம்பொழில் கண்டு மன்னன் மகிழ்ந்தான் குரவை ஆட்டம் கண்டு மகிழ்தல் கிளியூட்டும் பாவை மகளிரோடு களித்தல் இனிது வீற்றிருத்தல் இசைவும் வாழ்த்தும் மணிமேகலை வரவும் , மன்னனின் வினவலும் மணிமேகலை வேண்டலும் மன்னனின் ஆக்கமும்

சித்திரத்தில் அமைந்த தெய்வம் கூறல் உதயகுமரன் வஞ்சினம் உரைத்தல் சம்பாபதியின் திருவடிகளை மூன்றுமுறை வணங்குகிறான் . மணிமேகலையை இங்கு விட்டுச் செல்வேன் – வஞ்சினம் கூறல் சித்திரம் பேசுதல் : இதழ் விரியும் மாலை அணிந்த மன்னன் மகனே ! எம் தலைவி முன்னர் சிந்தியாது வஞ்சினம் கூறி நா வறுமையுற்றாய் !

வியப்புடன் நீங்கல் காற்றோட்டமில்லாத நிலவறையில் அகப்பட்டாற் போல வருந்தினான் . வியப்பு தரக்கூடிய செயல் ! மணிமேகலை மேல் கொண்ட விருப்பத்தை மறப்பாய் ! பலரின் பசியைக் களைவதற்கு மணிமேகலை கையில் எடுத்த அமுதசுரபி ( அள்ள அள்ளக் குறையாதது ) பிழை புரிந்தாய் என்று சித்திரப்பாவை பேசியது ! இவ்வுண்மைகளை மணிமேகலை வாயிலாக அறிவோம் !

பெருமூச்சுடன் சென்றான் பூமியைக் காரிருள் உண்ண சூரியனை ஓடச் செய்து கரிய யானையாகிய இரவு வருகிறது . இரவு யானையின் வெற்றியைப் பாராட்டப் பறையொலி எழுகிறது . அந்தி வானம் – நெற்றி பிறைத்திங்கள் – தந்தம் காற்று போல பின் தொடர்ந்தது . புகார் நகர நங்கையர் நம்பியர் மகரயாழில் இசை எழுப்பினர் .

காயசண்டிகையின் உருவில் உணவளித்தாள் க்ட்க்

சான்றோர் வழி நடந்தாள் சான்

சிறையகம் சேர்ந்தாள் சிற

அமுதசுரபியின் கொடைத்திறம் அமுத

பூம்பொழில் கண்டு மன்னன் மகிழ்ந்தான் MANIMEGALAI- BON PUSHPA REGINA 14 திருமால் வாமனனாகத் தோன்றி மூன்றடி மண் பெற்ற மாவலியின் வழித்தோன்றலாம் பாணகுலத்தரசனின் திருமகளாம் சீர்த்தி எனும் மாதேவியுடன் கிள்ளி வளவன் இருந்தான் . பூம்பொழிலில் விளையாடச் சென்றிருந்தான் . பூஞ்சோலையில் மணம் கமழும் மலர்ப்பந்தர் ! கொம்புகளில் தும்பிகள் – வேய்ங்குழல் வண்டுகள் – நல்யாழ் கானக்குயில்கள் – வரிப்பாட்டுகள் பாடும் மயில் – தோகை விரித்து ஆடும் இதைக் கண்ட வேந்தன் மனம் மகிழ்ந்தது .

குரவை ஆட்டம் கண்டு மகிழ்தல் MANIMEGALAI- BON PUSHPA REGINA 15 அன்ன ப்புள்ளினோடு , இளைய மயில் பேடை யும் , ஆண்மயிலும் சிறகுகளை விரித்து ஆடியக் காட்சி . கருநிற மணிவண்ணனும் , முன்னோனான பலராமனும் , பிஞ்ஞைப்பிராட்டியும் முன்னர் ஆடிய குரவை இது .

கிளியூட்டும் பாவை MANIMEGALAI- BON PUSHPA REGINA 16 மகரந்தத்துடன் மலர்ந்திருக்கும் மலரின் அருகில் உள்ள மாங்கனி , நெருங்கி அமர்ந்திருக்கும் மயில் ! செம்மையான பொன் தட்டில் பாலினை ஏந்திப் பசுமையான கிளிக்கு ஊட்டும் பாவை போன்றிருப்பதாக நினைத்து வியந்தான் .

மகளிரோடு களித்தல் MANIMEGALAI- BON PUSHPA REGINA 17 ( நாடகக்காப்பியத்தைக் கடைப்பிடிப்போர் ) கலைஞர்கள் யாழ் நரம்புகளால் முறையாகப் பண்ணிசைப்போர் குழலோடு , மிடற்றிசை ப் பொருந்த தாளம் கனிந்த பாடல்களை ஒத்துப் பாடுவோர் அறுபட்ட முத்துக்களைக் கோப்பவர் குங்குமக்குழம்பினை மேனியில் எழுதுவோர் . செங்கழுநீர் இதழ்களைத் தொடுப்போர் நீண்ட கூந்தலை நன்னீரில் ஆட்டுவோர் . பொன்னாலான வட்டக்கண்ணாடியில் வடிவழகைக் கண்டு மகிழ்வோர் . வானவர் வேந்தன் இந்திரன் போன்று கிள்ளிவளவன் விளையாடினான் .

இனிது வீற்றிருத்தல் பூம்பொழிலில் உள்ள பொன் மண்டபத்தின் அமைப்பு MANIMEGALAI- BON PUSHPA REGINA 18 மகத நாட்டு மணிமேகலைக்காரர் மராட்டப் பொற்கொல்லர் அவந்திநாட்டுக் கொல்லர் யவன நாட்டுத் தச்சர் தண்டமிழ் நாட்டுத் தொழில் வல்லுநர் கண்கவர் வேலைபாடுகளுடன் இவர்களால் அமைக்கப்பட்டப் பொன் மண்டபத்தில் விருப்பத்துடன் ஏறி இனிதே வீற்றிருந்தான் .

இசைவும் வாழ்த்தும் MANIMEGALAI- BON PUSHPA REGINA 19 வாயில் காப்போரிடம் அனுமதி பெற்று காவலர் மன்னனைக் காணுதல் நெடுங்கிள்ளி மண்ணாசையால் போருக்கு எழுந்தான் அவனுக்குத் துணையாக முறம் போன்றகாதுடைய யானை , தேர் , குதிரை , வாட்படை ஏந்திய மறவர் , தூசிப்படையோடு வஞ்சிமாலை சூடிய சேரனும் , பாண்டியனும் காரியாற்றங்கரையில் ஆத்திமாலை சூடிய உன் தம்பி நலங்கிள்ளியுடன் சேர பாண்டியரின் கொடியாம் வில்லையும் கயலையும் கைப்பற்றினாய் பெருங்கைகளையுடைய கிள்ளிவளவன் வாழ்க ! வெண்கொற்றக்குடையுடைய நீ பல் ஊழி காலம் புகழோளி வீசி வாழ்க ! வாழ்க நீ ! கெடுக நின் பகைவர் !

மணிமேகலை வரவும் , மன்னனின் வினவலும் MANIMEGALAI- BON PUSHPA REGINA 20 அரசே ! புகார் நகரத்தில் யானைத்தீ எனும் பசிப்பிணியால் வாடிய விஞ்சைமகள் திரிந்தாள் ! அவள் சிறைச்சாலையில் நுழைந்தாள் ! ஒரே பாத்திரம் கொண்டு அனைவருக்கும் உணவளிக்கிறாள் ! என்றனர் . அரசன் மணிமேகலையை அழைத்துவரக் கூற , வந்த மணிமேகலை அரசனை வாழ்த்துதல் . “ இளமையிலேயே தவநெறி கொண்ட நீ யார் ? உன் கையிலுள்ள பாத்திரம் எங்கே கிடைத்தது ?”

மணிமேகலை வேண்டலும் மன்னனின் ஆக்கமும் MANIMEGALAI- BON PUSHPA REGINA 21 மன்னனே , நீ நீடூழி வாழ்க ! நான் ஒரு வித்தியாதர நங்கை ! தீவினையால் சுற்றித்திரிந்தேன் அரசனை வாழ்த்துதல் ! இப்பாத்திரம் ஊரம்பலத்தில் தெய்வம் தந்தது . கடவுள் தன்மை பொருந்தியது . யானைத்தீ எனும் பசிநோய்த்தீர்த்தது . மக்களுக்கு உயிர்காக்கும் மருந்து . “ இளங்கொடிக்கு செய்ய வேண்டியது யாது ? சிறைச்சாலையை அழித்து , அருள் உள்ளமுடைய அறவோர் வாழும் அறச்சாலையாக ஆக்குக ! மன்னனும் சிறையிலிருந்தோரை விடுவித்து , பெருந்தவத்தோரால் அறமும் ஞானமுமாகிய சீலங்களை எய்துமாறு அறக்கோட்டமாக்கினான் .