Mushroom cultivation in tamil

10,119 views 24 slides Oct 02, 2016
Slide 1
Slide 1 of 24
Slide 1
1
Slide 2
2
Slide 3
3
Slide 4
4
Slide 5
5
Slide 6
6
Slide 7
7
Slide 8
8
Slide 9
9
Slide 10
10
Slide 11
11
Slide 12
12
Slide 13
13
Slide 14
14
Slide 15
15
Slide 16
16
Slide 17
17
Slide 18
18
Slide 19
19
Slide 20
20
Slide 21
21
Slide 22
22
Slide 23
23
Slide 24
24

About This Presentation

Mushroom cultivation in tamil


Slide Content

காளான் வளர்ப்பு Dr.B.Prakash.,M.Sc.,M.Tech.,M.Phil.,Ph.D.,DCS ., Assistant Professor, Department of Biotechnology Vivekanandha Arts & Science College for Women (Autonomous) Tiruchengode , Namakkal – 637 205 Ph: +91 9443204101, Mail : [email protected]

காளான் காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையில்லாத் தாவரமாகும் . காளான்கள் பல்வேறு வடிவங்களிலும் மற்றும் நிறங்களிலும் தோன்றுகின்றன . காளானில் ஒரு தண்டுப்பகுதியும் அதன் மேல் ஒரு தலைப்பகுதியும் காணப்படும் . பொதுவாக தலைப்பகுதி குடை மற்றும் சிப்பி போன்ற வடிவங்களில் காணப்படும் . தலைப்பகுதியின் அடியில் வரிவரியான செதில் போன்ற அமைப்புகள் இருக்கும்

உணவுக்காளான் இயற்கையில் காணப்படும் அனைத்து காளான்களையும் உணவுக்காக பயன்படுத்த இயலாது . ஏனெனில் சிலவகை காளான்கள் நச்சுத்தன்மை உடையது . வெண்மை நிறக் காளான்கள் அனைத்தும் உணவுக்கு பயன்படுத்தலாமென்றும் வேற்று நிறமுடைய காளான்கள் அனைத்துமே நச்சுத்தன்மை கொண்டவைகள் என்றும் கூறிவிடயியலாது . உதாரணத்திற்கு பொலிடாஸ் , மேர்செல்லா , சிடேக் , வால்வெரியல்லா போன்ற சுவை மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த காளான்கள் நிறம் உடையவை . அதே சமயம் அமோனியா பாலாய்டஸ் , அமானிடா வெர்ணா , பிளிரோட்டஸ் ஒலியேரியஸ் போன்ற வெண்மை நிறக்காளான்கள் நச்சுத்தன்மை மிக்கவை .

உணவுக் காளான்களையும் நச்சுக் காளான்களையும் வேறுபடு உணவுக் காளான்களையும் நச்சுக் காளான்களையும் வேறுபடுத்த சரியான முறைகள் இதுவரை கண்டறியப்படவில்லை சாதாரணமாக உணவுக் காளான்கள் தொடும் பொழுது அல்லது வெட்டும் பொழுது நிறம் மாறாமல் இருத்தல் வேண்டும் மற்றும் காளான் மணம் வீசப்பட வேண்டும் . நச்சுத்தன்மையற்ற காளான் இரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன . இவற்றை தேர்வு செய்து வளர்த்து பயன் பெறலாம் .

காளான் வளர்ப்பின் முக்கியத்துவம் நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 3000 மில்லியன் டன் பண்ணைக் கழிவுகள் கிடைக்கின்றது . இதில் ஒரளவு மட்டுமே கால் நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது . பெரும்பாலான பண்ணைக்கழிவுகள் எரிக்கப்பட்டு வருகின்றன . சுமார் 25 விழுக்காடு பண்ணைக் கழிவுகளை காளான் சாகுபடிக்கு உபயோகப்படுத்தினால் 400 மில்லியன் டன் காளான் உற்பத்தி செய்ய இயலும் . தற்போது 13,000 மெட்ரிக் டன் காளான்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . நமது தமிழ்நாட்டில் கிடைக்கும் 30 கோடி டன் பண்ணைக் கழிவுகளில் சுமார் 10 விழுக்காடு கழிவுகளை காளான் உற்பத்திக்கு பயன்படுத்தினால் 3.4 லட்சம் டன் காளான் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது . இதன் மூலம் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்ய முடியும் .

காளான் சாகுபடியில் உள்ள நன்மைகள்   காளான் வளர்ப்பிற்கு சிறிய இடம் போதுமானது . பண்ணையில் கிடைக்கும் சோளம் மற்றும் வைக்கோல் ஆகியவைகளை முறையே காளான் விதை மற்றும் காளான் உற்பத்திக்கு பயன்படுத்தலாம் . காளான் எடுத்த பின்பு உள்ள எஞ்சிய பொருட்களை இயற்கை உரமாக மாற்றி உபயோகிக்கலாம் .

காளான் இரகங்கள் இனம் நிறம் சிப்பிக்காளான் எம்.2 பிளிரோட்டஸ் சஜேர்காஜ% சாம்பல் கோ.1 சிட்ரினோபைளியேட்டஸ் தூய வெண்மை ஏ.பி.கே.1 பி.இயோஸ் இளஞ்சிவப்பு எம்.டி.யு.1 பி.ஜமோர் வெண்மை பி.எப். பிப்ளோரிடா வெண்மை எம்.டி.யு.2 பிப்ளேபல்லேட்டஸ் வெண்மை ஊட்டி 1 பி.ஆஸ்ட்ரியேட்டர்ஸ் வெண்மை கோ.2. ஹிப்ஸிசைகஸ் உல்மேரியஸ் வெண்மை பால்காளான் ஏ.பி.கே.2. கோலோசைபி இண்டிகா பால் வெண்மை மொட்டுக் காளான் ஊட்டி 1 அகாரிகஸ் பைஸ்போரஸ் பழுப்பு கலந்த வெண்மை ஊட்டி 2 அகாரிகஸ் பைஸ்போரஸ் பழுப்பு கலந்த வெண்மை

படுக்கை   தயாரிப்பு   மற்றும்   வளர்ப்பு   குடிசை மற்றும் மர நிழலில் நெல் வைக்கோல் காளானை வளர்க்கலாம் . புதிய , நோயற்ற வைகோலை பயன்படுத்த வேண்டும் . ஒரு படுக்கை தயாரிப்பதற்கு 10-15 கிலோ வைக்கோல் தேவைப்படும் . சமீபத்திய காலகட்டத்தில் , பாலித்தீன் குடிலில் வளர்ப்பதன் மூலம் 25-35 º செ வெப்பநிலை மற்றும் 75-80% ஒப்பு ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது .

நெல்   வைக்கோல்   கட்டு   முறை 1. 1 மீட்டர் நீளம் மற்றும் 0.75 மீட்டர் அகலத்தில் மரக்கட்டைகளை கொண்டு பரண் அமைக்க வேண்டும் . 2. ஒரு கிலோ எடை கொண்ட வைக்கோலை உருளையாக கட்ட வேண்டும் . 3. வைக்கோல் கட்டுகளை 12-18 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் . 4. கட்டுகளை வெளியே எடுத்து நீரை வடிக்க வேண்டும் . 5. வைக்கோல் கட்டுகளின் நுனிப்பகுதி ஒரு புரம் வருமாறு பரண்மேல் வரிசையாக அடுக்க வேண்டும் . 6. இரண்டாம் வரிசையில் நுனிப்பகுதி முதல் வரிசையின் எதிர்புறம் வருமாறு அடுக்கவும் . 7. காளான் வித்துகளை தூவிய பிறகு , மேற்கூறிய படி மூன்றாம் மற்றும் நான்காம் வரிசை அமைக்க வேண்டும் . 8. இந்த வரிசைக்கு மேல் காளான் வித்துக்களை தூவ வேண்டும் . 9. இதற்கு மேல் மீண்டும் இரண்டு வரிசை வைக்கோல் கட்டுகளை அடுக்க வேண்டும் . இவ்வாறு அடுக்கிய படுக்கைகளை பாலித்தீன் கொண்டு மூட வேண்டும் .  

குறிப்பு  :   வைக்கோல் கட்டுகளை நன்கு ஊற வைத்தால் , படுக்கை போதிய ஈரப்பதம் கொண்டிருக்கும் . இல்லையெனில் , பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும் . அதிக ஈரப்பதம் காணப்பட்டால் பாலித்தீன் மூடாக்கினை சற்று நேரம் நீக்க வேண்டும் . படுக்கையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவை கொண்டு காளான் வளர்ப்பின் மகசூல் இருக்கும் . காளான் மொட்டுகள் உருவாவதற்கு 30-35º செ மிதமான வெப்பநிலை தேவைப்படும் . வித்துக்கள் இட்ட 6-10 நாளில் காளான் மொட்டுக்கள் படுக்கையின் எல்லா பகுதியிலும் தோன்றும் . இதனை 4-5 நாட்களில் அறுவடை செய்யலாம் . காளானை மொட்டுப் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும் . ஏனெனில் வெடித்த காளான்களில் அதிக அளவு நார் இருக்கும் . 

மகசூல்   வித்துக்கள் இட்ட 6-10 நாளில் காளான் மொட்டுக்கள் படுக்கையின் எல்லா பகுதியிலும் தோன்றும் . இதனை 4-5 நாட்களில் அறுவடை செய்யலாம் . காளானை மொட்டுப் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும் . ஏனெனில் வெடித்த காளான்களில் அதிக அளவு நார் இருக்கும் .  10 கிலோ தளப்பொருளிலிருந்து 1-2 கிலோ காளான் அறுவடை செய்யலாம் .

சிப்பிக் காளான் வளர்ப்பு சிப்பிக் காளானைப் பண்ணைக் கழிவுகளான நெல் மற்றும் கோதுமை போன்றவைகளில் எளிதாக வளர்க்கலாம் .

சிப்பிக் காளான் குடில் தென்னங் கீத்து வேய்ந்த குடிலைக் காளான் சாகுபடி செய்யப் பயன்படுத்தலாம் . குடிலின் அளவு தினசரி நாம் உற்பத்தி செய்யும் காளான் அளவைப் பொறுத்து அமைய வேண்டும் . நாளொன்றுக்கு சுமார் 20 கிலோ காளான் உற்பத்தி செய்வதாக இருந்தால் சுமார் 300 ச.மீ அளவுக்குக் குடிலின் அளவு இருக்க வேண்டும் . காளான் குடிலை இரண்டாகத் தடுத்து ஒன்றை வித்துப் பரவும் அறையாகவும் மற்றொன்றைக் காளான் தோன்றும் அறையாகவும் பயன்படுத்தலாம் . வித்துப் பரவும் அறையின் வெப்ப நிலை 20-30 o   செல்சியஸ் வரை இருக்கலாம் . அதிகப்படியான வெளிச்சம் தேவையில்லை . ஆனால் காற்றோட்டம் தேவை . அறையின் சன்னல்களுக்கு 35மெஷ் அளவுள்ள நைலான் வலைகளைப் பொருத்தி காளான் ஈ போன்ற தீமை பயக்கும் பூச்சிகள் புகா வண்ணம் தடுக்கலாம் .

சிப்பிக் காளான் வளர்க்கப் பாலிதீன் பைகளில் உருளைப் படுக்கைகள் தயாரிக்க வேண்டும் . வியாபார ரீதியில் காளான் உற்பத்தி செய்ய நெல் வைக்கோல் சிறந்தது . படுக்கைகள் தயாரிக்கும் முன் வைக்கோலைப் பதப்படுத்துவது மிகவும் அவசியம் . பொதுவாக மூன்று பதப்படுத்தும் முறைகள் கையாளப்படுகின்றன . 1. கொதிக்கும் நீரில் பதப்படுத்துதல் 2. நீராவியில் பதப்படுத்துதல் 3. இரசாயண முறையில் பதப்படுத்ததல் ( i ) கொதிக்கும் நீரில் பதப்படுத்துதல் நன்கு உலர்ந்த வைக்கோலை 5 செ.மீட்டர் அளவுள்ள துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் 4-5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . ஊற வைத்த வைக்கோல் துண்டுகளை சுமார் 1 மணி நேரம் 8 o   செ . கொதிநிலையில் தண்ணீரில் அமிழ்ந்திருக்குமாறு செய்ய வேண்டும் . (ii) நீராவியில் பதப்படுத்துதல் ஊற வைத்த வைக்கோல்த் துண்டுகளை ஆட்டோக்ளேவ் போன்று வடிவமைக்கப்பட்ட கொதி கலன்களில் நீராவியினால் சுமார் 45-60 நிமிடங்கள் பதப்படுத்தலாம் .

வைக்கோலை எதற்காக நாம் பதப்படுத்த வேண்டும் . 1. ஒன்று ... நெல் வைக்கோலில் உள்ள அதிகப்படியான நுண்ணுயிரிகளைக் குறைத்தல். இதனால் களைப் பூசணங்கள் தோன்றுவது குறைகின்றது. 2. இரண்டு ... காளான் வித்துக்கள் பரப்பிய பிறகு காளான் பூசண இழைகள் எளிதாக வைக்கோலின் மேற்பரப்பில் பரவி வளர வாய்ப்பாக அமைகிறது .

காளான் வித்திடுதல் சுமார் 60க்கு 30 செ.மீ. அளவுள்ள பாலிதீன் பைகளில் (80 காஜீ பருமன்) அடுக்கு முறையில் வித்திட்டு உருளைப் படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு காளான் வித்துப் புட்டியைப் பயன்படுத்தி இரண்டு படுக்கைகள் வரை தயாரிக்கலாம். முதலில் பாலிதீன் பையின் அடிப்பகுதியைச் சணல் நூலால் கட்டி பையதை் திறந்து பதப்படுத்திய வைக்கோல் துண்டுகளை சுமார் 5 செ.மீ.உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அதன் மேற்பரப்பு முழுவதும் சுமார் 25 கிராம் அளவிற்குக் காளான் வித்துக்களைத் தூவ வேண்டும். மீண்டும் அதன் முல் 10 செ.மீ. அளவிற்கு வைக்கோல் துண்டுகளை இரண்டாவது அடுக்காக நிரப்பி அதன் மேற்பகுதியில் 25 கிராம் அளவிற்கு வித்துக்களைத் தூவ வேண்டும். இதே போல் மூன்றாவது மற்றும் நான்காவது அடுக்குகளைத் தயார் செய்ய வேண்டும்.

முடிவாக 5 செ.மீ. உயரத்திற்கு ஐந்தாவது அடுக்காக வைக்கோல் துண்டுகளை பரப்பிய பின் பயைின் வாய்ப்பகுதியை சணல் நூலால் கட்ட வேண்டும். ஒவ்வொரு முறை வைக்கோல் நிரப்பும் போதும் பையினை நன்றாகக் குலுக்கி விட வேண்டும். பின் 10-15 துளைகளை இட வேண்டும். தயாரித்த உருளைப் படுக்கைகளைப் பூசண இழை பரவும் அறையில் பல அடுக்குகளாக தொங்க விட வேண்டும். படுக்கை முழுவதும் பூசண இழைகள் முழுமையாகப் பரவ சுமார் 15 முதல் 20 நாட்களாகும். காளான் பூசணம் முழுமையாகப் பரவிய பின் மூன்று நான்கு நாட்களில் காளான் மொட்டுகள் படுக்கையின் மேற்பரப்பில் தோன்றும்

மொட்டுக்கள் தோன்றிய இரண்டு மூன்று நாட்களில் காளான்கள் முழு வளர்ச்சியடைகின்றன. காளான்களைத் தண்ணீர் தெளிக்குமுன் பறித்துச் சுத்தம் செய்து துளையிட்ட பாலிதீன் பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம். முதல் அறுவடை முடிந்தவுடன் படுக்கையில் மேலும் 10 துளைகள் இட்டு மீண்டும் தண்ணீர் தெளித்து வந்தால் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாகக் காளான்கள் தோன்றும். இம்முறையைப் பின்பற்றி மூன்றாவது முறையாகவும் காளான் அறுவடை செய்யலாம் . முதல் அறுவடை முடிந்தபின் காளான் படுக்கைகளை கத்தியால் கிழித்து விட்டு தண்ணீர் தெளிப்பதால் இரண்டாவது . மூன்றாவது அறுவடைகளை செய்யலாம் .

காளான் வளர்ப்பில் ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வு முறைகளும் காளான் வளர்ப்பின் போது களைப் பூசணங்கள் , பூச்சிகள் , நோய்கள் மற்றும் இயற்கைச் சூழல் மாறுபாடுகளால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றும் . காளான் என்பது பூசண வகையைச் சார்ந்த நுண்ணுயிர் என்பதை நாம் அனைவரும் அறிவோம் . இயற்கையில் தோன்றும் பல்வேறு நுண்ணுயிர்கள் காளான் பூசணத்துடன் போட்டியிட்டு வித்துப்பை அல்லது படுக்கைகளில் தோன்றி அவற்றைச் சேதப்படுத்தலாம் . எனவே காளான் பண்ணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம் . காளான் அறுவடைக்குப்பின் எஞ்சிய படுக்கைகளை உடனுக்குடன் அகற்றி எருக்குழிகளில் இட்டு மண்ணால் மூட வேண்டும் . பண்ணையைச் சுற்றி சாக்கடை நீர் தேங்காதவாறும் . மாட்டுத் தொழுவங்கள் , மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் ஆகியன இல்லாமலும் பராமரிக்க வேண்டும் . வித்துத் தயாரிக்கும் அறை , வித்துப் பரவும் அறை , காளான் தோன்றும் அறைகளில் அதிக தூசு படியக்கூடாது . காளான் வித்துப் பைகளில் ஆஸ்பெர்சில்லஸ் , பெனிசிலியம் , டிரைக்கோடெர்மா , ரைசோபஸ் போன்ற களைப் பூசணங்கள் தோன்றலாம்

இதனைத் தவிர்க்க நன்கு முற்றிய , பூச்சி , பூசணங்கள் தாக்காத சோளத்தைப் பயன்படுத்த வேண்டும் . வித்துத் தயாரிக்கும் அறையைத் தொற்று நீக்கம் செய்து , பத்து அல்லது பதினைந்து நாள் இடைவெளியில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்மலின் திரவத்தை 1:2 என்ற விகிதத்தில் கலந்து புகையூட்டம் ஏற்படுத்திப் பராமரித்தல் அவசியம் . வித்துப்புட்டிகளை ஈரம் உறிஞ்சாத பஞ்சினால் நன்றாக அடைக்க வேண்டும் . ஒவ்வொரு முறையும் வித்துத் தயாரிக்கும் முன் யு.வி.விளக்கை அதாவது புறஊதாக் கதிர் விளக்கை 20 நிமிட நேரம் ஒளிர விட வேண்டும் . வித்து மாற்றம் செய்யும்போது புன்சன் குழல் விளக்கின் நீல வண்ண தீச்சுடருக்கு அருகில் வித்து ஊட்டியின் வாய்பாகம் இருக்குமாறு கவனித்துச் செய்ய வேண்டும் .

கட்டுப்படுத்த தாக்குதல் பரவாமல் இருக்க பாதிக்கப்பட்ட காளான்களை எடுத்து அகற்ற வேண்டும். வளரும் வீடுகள் தூய்மையாக இருக்க வேண்டும். நோயகள் தென்பட்டால் வெப்பநிலையை 14 º செல்சிஸியஸாக குறைக்கவும். சுத்தமான கருவியைப் பயன்படுத்தவும். பூச்சிகள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்தவும். உப்பு நீர்க்குமிழியை அகற்றிவிடும்.

iii) ஈரமான நீர்க்குமிழி   காளான்கள் உருவமாற்றம் ஏற்பட்டு தண்டுகள் வீங்கி காணப்படும். காளானின் தலைப்புகதி குறைந்தும், உருக்குலைந்தும் காணப்படும். வேறுபடுத்த முடியாத திசுக்கள் காய்ந்தும், ஈரப்பதமாக மாறி மென்மை அழுகல் நோய் தாக்கி துர் நாற்றத்தை வெளிப்படுத்தும். தாக்கப்பட்ட காளான்களில் நிமினை திரம் தோன்றும். காளான்கள் பழுப்பு நிறத்தில் மாறிவிடும் நீர்க்குமிழிகள் திராட்சைப் பழத்தைவிட பெரியதாகத் தோன்றும் பூசணங்கள் காற்று வழியாக தூசு போன்று பரவும். பின் உறையிடுதலை மாசுபடுத்தும். இது காட்டுக் காளான்களில் ஒரு வகையான ஒட்டுண்ணி இது இரண்டு வகையான பூசணவித்தை உருவாக்கும். ஒன்று சிறியதாக இருக்கும் மற்றும் வெர்ட்டிசிலியம் போன்று நீர் பரப்புதல் ஆகும். இரண்டாவது பெரியதாகவும், ஓய்வு பூசணவித்தை கொண்டு சுற்றுப்புறத்தில் நீண்ட நாட்கள் வரை நீடிக்கும்.

கட்டுப்பாடு வளரும் இடங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சாகுபடி செய்யும் பகுதிகளில் உள்ள சுற்றப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். பென்சிமிடாசோலை உறையிடுதலில் உட்செலுத்த வேண்டும். 0.95 கிராம்/மீட்டர்2  பெனொமில்லை பயன்படுத்தவும். 0.62 கிராம்/மீட்டா்2  கார்பன்டாசிம் மற்றும் தையோபென்டசோல் பயன்படுத்தவும் .

நன்றி