சார்பெழுத்து வகைகள் : பத்து உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலுகரம் குற்றியலிகரம் ஐகாரக்குறுக்கம் ஒளகார குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய் உயிரும் மெய்யும் கூடிப்பிறக்கும் எழுத்து உயிர்மெய் எழுத்தாகும் . சான்று : க் + அ = கா
அளபெடையின் வகைகள் : இரண்டு உயிரளபெடை ஒற்றளபெடை
உயிரளபெடையின் வகைகள் : மூன்று செய்யுளிசை அளபெடை சொல்லிசை அளபெடை இன்னிசை அளபெடை
ஒற்றளபெடை : மெய்யெழுத்து அளபெடுக்கும் சான்று : இலங்ங்கு வெண்பிறை
குற்றியலுகரத்தின் வகைகள் : ஆறு வன்தொடர்க் குற்றியலுகரம் சான்று : சுக்கு,பட்டு,பத்து மென் தொடர்க் குற்றியலுகரம் சான்று : பந்து,நன்று இடைத் தொடர்க் குற்றியலுகரம் சான்று : கொய்து,சால்பு உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் சான்று : பாலாறு,அரசு நெடில் தொடர்க் குற்றியலுகரம் சான்று : நாடு,பாடு ஆய்த தொடர்க் குற்றியலுகரம் சான்று : எஃகு, அஃது
குற்றியலிகரம் சான்று : வீடு + யாது = வீடியாது
குறுக்கம் வகைகள் : நான்கு ஐகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம்
ஐகாரக்குறுக்கம் மொழி முதல்,இடை,கடை ஐகாரம் குறுகும். சான்றுகள் : தையல் (மொழி முதல்) தலைவன் (மொழி இடை) 🐦 பறவை (மொழி கடை)
ஒளகாரக்குறுக்கம் மொழி முதலில் மட்டும் குறுகும். சான்று : ஒளவை,வெளவால்
மகரக்குறுக்கம் சான்று : போன்ம் – போலும் மருண்ம் - மருளும்
ஆய்தக்குறுக்கம் சான்று : கல் + தீது = கஃறீது முள் + தீது = முஃடீது