2025-2026 ஆம் கல்வி ஆண்டு – இரண்டாம் பருவம் மாநில அளவிலான பயிற்சி எண்ணும் எழுத்தும் அறிவியல்
மாநில அடைவு ஆய்வில் அறிவியல் கற்றல் விளைவுகள் 05 02 SLAS – EVS – மாவட்ட வாரியான முடிவுகள் 03 சூழ்நிலையியல் - அறிவியல் பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு - 1 01 பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு - 2 06 நாம் காண இருப்பவை 07 பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு - 3 04 மாதிரி கட்டகப் பகுப்பாய்வு 08 தனி நிகழ்வாய்வு (Case study) 09 தொகுப்புரை
மாநில அடைவு ஆய்வில் இடம் பெற்ற அறிவியல் பாட கற்றல் விளைவுகள் மற்றும் வினாக்கள்
மாநில அடைவு ஆய்வில் அறிவியல் பாடத்தில் கற்றல் விளைவுகள் வினா எண் கற்றல் விளைவு 37 EVS 404 பறவைகளின் ( கூடு கட்டுதல் ) விலங்குகளின ( எறும்பு , தேனீக்கள் , யானை ) குழு / மந்தை நடத்தைகள் , குடும்பத்தின் மாற்றங்களை ( எ.கா . பிறப்பு , திருமணம் , வேலை நிமித்தமாக இடமாற்றம் போன்ற காரணங்களால் ) விளக்குதல் 35 EVS 408 விலங்குகள் , பறவைகள் , தாவரங்களை உற்றுநோக்கக்கூடிய பண்புகளின் அடிப்படையில் ( தோற்றம் , செவி மடல்கள் , உரோமம் , அலகுகள் , பற்கள் , தோலின் அமைப்பு ) வகைப்படுத்துதல் . 31 EVS 502 நமது அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைப் ( உணவு , நீர் போன்றவை ) பெறுதல் மற்றும் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துதல் பற்றி விளக்குதல் ( பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ) 32, 33, 34, 36 EVS 409 & 509 செயல்பாடுகளின் நிகழ்வுகளின் அமைப்பு முறையை ஊகித்து ( மிதத்தல் , மூழ்குதல் , கலக்குதல் , ஆவியாதல் , விதை முளைத்தல் , உணவு கெட்டுப்போதல் ) காரண , காரியத் தொடர்பினை ஏற்படுத்துதல் . 38 EVS 513 சுத்தம் , சுகாதாரம் , வளங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றிற்கு ஆலோசனைகளை அளித்தல் .
வினா எண் வினா அடைவு விழுக்காடு 31 சுமதியின் வீட்டில் இருந்த மாமரத்தில் நிறைய மாங்காய்கள் காய்த்திருந்தன . சுமதியின் அம்மா எம்முறையைப் பயன்படுத்தி மாங்காய்களை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கு தயார் செய்திருப்பார் ? அ) குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தல் ஆ) ஊறுகாய் தயாரித்தல் இ) காற்றுப்புகாத பெட்டியில் அடைத்து வைத்தல் ஈ) வேகவைத்துப் புட்டியில் அடைத்தல் 54% 32 சுவாதி தேங்காய் எண்ணெய் உள்ள பாத்திரத்தில் நீரை ஊற்றி விட்டாள் . எண்ணெய் நீருடன் கலக்காமல் இருப்பதை சுவாதி காண்கிறாள் . அதற்கான காரணம் என்ன ? அ) தேங்காய் எண்ணெயின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட அதிகம் . ஆ) தேங்காய் எண்ணெயின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விடக் குறைவு இ) தேங்காய் எண்ணெய் இரண்டும் சமம் மற்றும் நீரின் அடர்த்தி ஈ) தேங்காய் எண்ணெயின் அடர்த்தி மற்றும் நீரின் அடர்த்தி வளிமண்டல அடர்த்தியை விடக் குறைவு 51% 33 பின்வருவனவற்றுள் எது நீரில் மிதக்கும் பொருள் அல்ல ? அ) இலை ஆ) நாணயம் இ) நெகிழிப்பந்து ஈ) தக்கை 56% 34 செழியன் காலையில் பள்ளி செல்லும் போது மழை பெய்து சாலை ஈரமாகக் காணப்பட்டது . பகல் பொழுதில் நல்ல வெப்பம் காரணமாக மாலை வீடு திரும்பும் போது சாலை நன்கு உலர்ந்திருப்பதைக் காண்கிறான் . இங்கு என்ன நடந்திருக்கும் ? அ) நீர் ஆவியாகி இருக்கும் ஆ) நீர் உறைந்திருக்கும் இ) நீர் உருகியிருக்கும் ஈ) எந்த மாற்றமும் நடைபெறவில்லை 51%
வினா எண் வினா அடைவு விழுக்காடு 35 கீழ்க்காண்பனவற்றுள் தனது குட்டியைச் சுமந் து செல்வதற்கான சிறப்பான தகவமைப்புப் பெற்றுள்ள விலங் கு எது? அ) யானை ஆ) பசு இ) கங்காரு ஈ) புலி 63% 36 எழில் தனது அம்மா தனக்குக் கொடுத்த ரொட்டித் துண்டுகளைச் சாப்பிடாமல் மேசையின்மீது வைத்துவிட்டான். ஒரு வாரம் சென்றபின் அதன்மீது கருமையான படலம் ஒன்று படிந்திருப்பதை அவன் பார்த்தான்.இது குறித்து ஆசிரியரிடம் கேட்டபோது ஆசிரியரின் பதில் என்னவாக இருக்கும்? அ) ரொட்டித்துண்டின் மீது தூசி படிந்துள்ளது. ஆ) ரொட்டித்துண்டின் மீது பூஞ்சைகள் வளர்ந்துள்ளன. இ) ரொட்டித்துண்டில் கருமை நிற மை படிந்துள்ளது. ஈ) ரொட்டித்துண்டு வேதி வினையின் காரணமாகக் கருமையாக மாறியுள்ளது. 49% 37 மாயா கடற்கரைக்குச் சென்றபோது " V" வடிவத்தில் பறக்கும் பறவைகளின் கூட்டத்தைப் பார்த்தாள். அப்பறவைகள் " V வடிவத்தில் பறப்பதற்கான காரணம் என்ன? அ) ஆற்றலைச் சேமிக்கவும் காற்றின் எதிர்ப்பைக் குறைக்கவும். ஆ) வேட்டையாடுபவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்க. இ) தங்களின் எதிரிகளை வேட்டையாட ஈ) தங்களின் இளம் பறவைகளைப் பாதுகாக்க 58% 38 மறு சுழற்சி செய்ய இயலாத கழிவுகளைக் குறிக்கும் குறியீடு எது ? 68% அ) ஆ) இ) ஈ)
சூழ்நிலையியில் பாடத்தில் மாநில அடைவு ஆய்வில் மாவட்ட வாரியான சராசரி அடைவு விவரம் வ. எண் மாவட்டம் சராசரி அடைவு வ. எண் மாவட்டம் சராசரி அடைவு 1 அரியலூர் 60 20 இராமநாதபுரம் 62 2 செங்கல்பட்டு 49 21 இராணிப்பேட்டை 60 3 சென்னை 47 22 சேலம் 52 4 கோயம்புத்தூர் 47 23 சிவகங்கை 61 5 கடலூர் 63 24 தென்காசி 63 6 தருமபுரி 54 25 தஞ்சாவூர் 59 7 திண்டுக்கல் 61 26 நீலகிரி 50 8 ஈரோடு 50 27 தேனி 60 9 கள்ளக்குறிச்சி 60 28 தூத்துக்குடி 53 10 காஞ்சிபுரம் 55 29 திருச்சிராப்பள்ளி 60 11 கன்னியாகுமரி 67 30 திருநெல்வேலி 53 12 கரூர் 53 31 திருப்பத்தூர் 54 13 கிருஷ்ணகிரி 58 32 திருப்பூர் 52 14 மதுரை 63 33 திருவள்ளூர் 53 15 மயிலாடுதுறை 60 34 திருவண்ணாமலை 63 16 நாகப்பட்டிணம் 55 35 திருவாரூர் 53 17 நாமக்கல் 51 36 வேலூர் 56 18 பெரம்பலூர் 59 37 விழுப்புரம் 59 19 புதுக்கோட்டை 60 38 விருதுநகர் 60 சூழ்நிலையியல் மாநில சராசரி அடைவு ∶ 57
சூழ்நிலையியல் – அறிவியல் வகுப்பு 1, 2, 3 ஆகியவற்றில் சூழ்நிலையியல் அறிவியல் பாடப்பொருள்களானவை தமிழ் , ஆங்கிலம் , கணக்கு பாடங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன . அடுத்த நழுவத்தில் காட்டப்பட்டுள்ள பாடப்பொருள்கள் 3.40 முதல் 4.10 வரையில் உள்ள பாடவேளையில் குறிப்பிட்டுள்ளவாறு அந்தந்த வகுப்புகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும் . ஒருங்கிணைக்க ஏதுவான பாடப்பொருள்கள் தமிழ் , ஆங்கிலம் , கணக்குப் பாடத்திற்கான வழக்கமான செயல்பாடுகளுடன் உள்ளடக்கப்பட்டுள்ளன . தனித்துவமான சூழ்நிலையியல் பாடப்பொருள்கள் செயல்திட்டங்களாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன .
வகுப்பு 1 -3, சூழ்நிலையியல் ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்படாத பாடப்பகுதிகள் வகுப்பு 1 வகுப்பு 2 வகுப்பு 3 வகுப்பு 1 வகுப்பு 2 வகுப்பு 3 சுவையான உணவு நீர் எனது அற்புதமான உடல் நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் உணவும் உடல் நலமும் , நீர் எனது அற்புதமான உடல் நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் எனது உடல் உயிருள்ள , உயிரற்ற பொருள்கள் , இயற்கையின் கொடை நமது சுற்றுச்சூழல் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் பருப்பொருள்களின் நிலைகள் விசை அன்றாட வாழ்வில் அறிவியல் வகுப்பு 3இல் கணக்குப் பாட ஆசிரியர் கையேட்டின் இறுதியில் ஒருங்கிணைக்கப்படாத அறிவியல் பாடப்பொருள்கள் செயல்திட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன .
தமிழ் ஆசிரியர் கையேட்டில் சூழ்நிலையியல் பாட ஒருங்கிணைப்பு இரண்டாம் பருவ ஆங்கில ஆசிரியர் கையேட்டில் சூழ்நிலையியல் பாட ஓருங்கிணைப்பு
மாதிரி கட்டகப் பகுப்பாய்வு விதையின் பயணம் கற்றல் விளைவு உடனடிச் சுற்றுப்புறத்தில் மலர்கள் , வேர்கள் , கனிகளின் எளிய பண்புகளைக் கண்டறிதல்
பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு - 1
கட்டகப் பகுப்பாய்வுகள் தொடர்பாக பங்கேற்கும் குழுவினருக்கான பொதுவான வினாக்கள் அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாவிற்கான விடையளிக்க ஏதுவாக ஆசிரியர் கையேட்டின் செயல்பாட்டின் எப்பகுதிகள் அமைந்துள்ளன ? பயிற்சி நூலின் எப்பகுதிகள் குறிப்பிட்ட கற்றல் விளைவை சோதித்து அறிய உதவிகரமாக இருந்தன ?
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட ஒரு வினாவும் – ஆசிரியர் கையேட்டில் உள்ள செயல்பாடும் செழியன் காலையில் பள்ளி செல்லும் போது மழை பெய்து சாலை ஈரமாகக் காணப்பட்டது . பகல் பொழுதில் நல்ல வெப்பம் காரணமாக மாலை வீடு திரும்பும் போது சாலை நன்கு உலர்ந்திருப்பதைக் காண்கிறான் . இங்கு என்ன நடந்திருக்கும் ? அ) நீர் ஆவியாகி இருக்கும் ஆ) நீர் உறைந்திருக்கும் இ) நீர் உருகியிருக்கும் ஈ) எந்த மாற்றமும் நடைபெறவில்லை கற்றல் விளைவு : EVS 409 & 509 செயல்பாடுகளின் நிகழ்வுகளின் அமைப்பு முறையை ஊகித்து ( ஆவியாதல் , விதை முளைத்தல் , உணவு கெட்டுப்போதல் ) காரண , காரியத் தொடர்பினை ஏற்படுத்துதல் .
கட்டகப் பகுப்பாய்வு (1) இற்கான விடைகள் அறிமுகப் பகுதியில் “ கரும்பலகையை ஈர அழிப்பான் கொண்டு அழித்து சிறிது நேரம் சென்ற பின் என்ன நடக்கிறது ?” என்ற வினா – உரையாடல் நீரின் நிலை மாற்றங்களைச் செய்து பார்த்து உற்றுநோக்கி அறிந்து கொள்ளும் வகையில் செயல்பாடு பயிற்சித்தாள்களில் செயல்வழியாகக் கற்றவற்றை நினைவுகூர்ந்து வலுவூட்டிக் கொள்ள வாய்ப்பு
பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு - 2
சார்ந்த கற்றல் விளைவு EVS 502 நமது அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைப் ( உணவு , நீர் போன்றவை ) பெறுதல் மற்றும் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துதல் பற்றி விளக்குதல் ( பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ) கற்றல் விளைவு சார்ந்து மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினா சுமதியின் வீட்டில் இருந்த மாமரத்தில் நிறைய மாங்காய்கள் காய்த்திருந்தன . சுமதியின் அம்மா எம்முறையைப் பயன்படுத்தி மாங்காய்களை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கு தயார் செய்திருப்பார் ? அ) குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தல் ஆ) ஊறுகாய் தயாரித்தல் இ) காற்றுப்புகாத பெட்டியில் அடைத்து வைத்தல் ஈ) வேகவைத்துப் புட்டியில் அடைத்தல்
வகுப்பு 4, செயல்பாடு 2 : பாதுகாக்கலாம் ! உணவைப் பாதுகாக்கலாம் ! கற்றல் விளைவு : உணவைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து எடுத்துரைப்பர் .
கட்டகப் பகுப்பாய்வு (2) இற்கான விடைகள் பயிற்சி நூல் பயிற்சி 1.5 இன் படி மாணவர்கள் உணவினைப் பாதுகாத்தல் தொடர்பாகக் கேட்டு வந்த விவரங்களைக் கொண்டு பாடப்பொருள் அறிமுகம் உணவுப் பாதுகாப்பு முறைகள் குறித்த பாடல் வழியாக பாடப்பொருள் விளக்கம் பயிற்சித்தாள்களில் செயல்திட்டம் மற்றும் பாடல் வழிக் கற்றவற்றை நினைவுகூர்ந்து வலுவூட்டிக் கொள்ள வாய்ப்பு
பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு - 3
சார்ந்த கற்றல் விளைவு EVS 409 & 509 செயல்பாடுகளின் நிகழ்வுகளின் அமைப்பு முறையை ஊகித்து ( மிதத்தல் , மூழ்குதல் , கலக்குதல் , ஆவியாதல் , விதை முளைத்தல் , உணவு கெட்டுப்போதல் ) காரண , காரியத் தொடர்பினை ஏற்படுத்துதல் . கற்றல் விளைவு சார்ந்து மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினா எழில் தனது அம்மா கொடுத்த ரொட்டித்துண்டுகளைச் சாப்பிடாமல் மேசையின் மீது வைத்துவிட்டான் . ஒரு வாரம் சென்ற பின் அதன் மீது கருமையான படலம் ஒன்று படிந்திருப்பதைப் பார்த்தான் . இது குறித்து ஆசிரியரிடம் கேட்ட போது ஆசிரியரின் பதில் என்னவாக இருக்கும் ? அ) ரொட்டித்துண்டின் மீது தூசு படிந்துள்ளது . ஆ) ரொட்டித்துண்டின் மீது பூஞ்சைகள் வளர்ந்துள்ளன . இ) ரொட்டித்துண்டில் கருமை நிற மை படிந்துள்ளது . ஈ) ரொட்டித்துண்டு வேதிவினையின் காரணமாகக் கருமையாக மாறியுள்ளது .
வகுப்பு 5, செயல்பாடு 4, முடிந்தால் பிடி ! கற்றல் விளைவு உணவு கெட்டுப்போவதற்கான காரணங்களை அறிந்து விளக்குவர் .
கட்டகப் பகுப்பாய்வு (3) இற்கான விடைகள் உணவு பாதுகாப்பு முறைகள் தொடர்பான முன்னறிவை நினைவுகூர்தல் உண்மைப் பொருள்கள் அல்லது பட அட்டைகளைக் காட்சிப்படுத்தி பாடப்பொருள் அறிமுகம் உணவுப்பொருள்கள் கெட்டுப்போவதற்கான காரணிகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் இவற்றைத் தொடர்புபடுத்தி விளையாட்டு வழிக் கற்றல் செயல்பாடு பயிற்சித்தாள்களில் விளையாட்டுவழியாகக் கற்றவற்றை நினைவுகூர்ந்து வலுவூட்டிக் கொள்ள வாய்ப்பு
தனி நிகழ்வாய்வு (Case Study)
முடிந்தால் பிடி – உணவு கெட்டுப்போதல் பற்றிய கற்றல் கற்பித்தல் செயல்பாடு விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையத்தில் உள்ள டி . ஏ. கே . எம் . இராமம்மாள் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை சு . தீபா பயன்படுத்திய கற்பித்தல் அணுகுமுறை ஆசிரியை மாணவர்கள் முன் இரண்டு ரொட்டித் துண்டுகளை வைத்தார் - ஒன்று புதியது , மற்றொன்று பூஞ்சை படர்ந்தது . எந்த ரொட்டித் துண்டை சாப்பிட விரும்புவீர்கள் என்று மாணவர்களிடம் கேட்கப்பட்டது . அவர்கள் அனைவருமே புதிய துண்டைத் தேர்ந்தெடுத்தனர் . ரொட்டி ஏன் கெட்டுப்போனது என்று நினைக்கிறீர்கள் என்று ஆசிரியை மாணவர்களிடம் கேட்ட போது பெரும்பாலான மாணவர்கள் பாக்கெட்டைத் திறந்து வைத்ததே கெட்டுப்போதலுக்குக் காரணம் என்று கூறியுள்ளனர் . மாணவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்வித்தலையே பொதுவான உணவு பாதுகாப்பு முறையாக அறிந்திருந்தனர். ஆசிரியை " முடிந்தால் பிடி " விளையாட்டை அறிமுகப்படுத்தி , மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து விளையாட வைத்து அதன் பிறகு உணவுப் பாதுகாப்பு முறைகள் பற்றிய கலந்துரையாடலை வழிநடத் தியுள்ளார் , விளையாட்டு வழி கற்றல் செயல்பாடு மற்றும் கலந்துரையாடலின் சரியான பயன்பாட்டிற்குப் பிறகு மாணவர்கள் உப்பிடுதல் , குளிரூட்டுதல் , கொதிக்க வைத்தல் , உலர்த்துதல் , புட்டியில் அடைத்தல் , சர்க்கரை சேர்த்தல் போன்ற பல்வேறு முறைகளைப் பற்றிய சரியான புரிதலைப் பெற்றுள்ளனர் .
வகுப்பு 5, செயல்பாடு – 2, விருந்துக்கு வாங்க
கற்றல் விளைவு என்ற இலக்கை அடைய ஆசிரியர் கையேடே எளிய வழி கற்றல் விளைவுகளை மாணவர்கள் அடைவதற்கு செயல்வழிக் கற்றலே பெரிதும் துணை புரிகிறது . எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேட்டில் உள்ள செயல்பாடுகள் , . கற்பவர் மையமானவை . கற்பவருக்கு இனிமையானவை , எளிமையானவை விளைவினைக் கண்டிட , வெற்றியைப் பெற்றிட ஆசிரியர் கையேட்டின் வழி நடப்போம் .