மாநில அளவிலான பயிற்சி எண்ணும் எழுத்தும் சமூக அறிவியல் 2025 -2026 ஆம் கல்வி ஆண்டு – இரண்டாம் பருவம்
நாம் காண இருப்பவை சமூக அறிவியல் - வகுப்பு 3 மாநில அடைவு ஆய்வில் சமூக அறிவியல் (4&5) கற்றல் விளைவுகள் SLAS வினாவும் ஆசிரியர் கையேடும் – ஒரு பார்வை பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு-1 பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு-2 தனி நிகழாய்வு தொகுப்பு ஆர்வமூட்டல்
பங்கேற்பாளர்களை 12 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்துக் கொண்டு எண்கள் எழுதப்பட்ட அட்டைகளை வழங்க வேண்டும் . கருத்தாளர் கீழ்க்காணும் வினாக்களைக் கேட்க , அதற்கான விடைகளை விரைந்து காண்பிக்கும் குழுவினரைப் பாராட்ட வேண்டும் . ஆர்வமூட்டல் எவரெஸ்ட்டின் உயரம் இந்திய மாநிலங்கள் , தமிழ்நாட்டின் மாவட்டங்கள் குடியரசு தின விழா ( தேதி , மாதம் , வருடம் )
சமூக அறிவியல் – வகுப்பு 3 பருவம் - 2 கால அட்டவணைப்படி திங்கள் , புதன் , வெள்ளி ஆகிய நாள்களில் 30 நிமிடப் பாடவேளையில் ஒருங்கிணைக்கப்படாத 3 ஆம் வகுப்பின் சமூக அறிவியல் பாடக்கருத்துகளை கற்பிக்க வேண்டும் . ஒருங்கிணைக்க ஏதுவான பாடக்கருத்துகள் ஆங்கிலப் பாடத்திற்கான வழக்கமான செயல்பாடுகளுடன் உள்ளடக்கப்பட்டுள்ளன . ஒருங்கிணைக்கப்படாத சமூக அறிவியல் பாடப் பகுதிக்கான செயல்பாடுகள் கணக்குப் பாட ஆசிரியர் கையேட்டின் இறுதிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன .
ஆங்கில ஆசிரியர் கையேட்டில் சூழ்நிலையியல் ( சமூக அறிவியல் ) பாட ஒருங்கிணைப்பு 3 ஆம் வகுப்பு , பாடம் 2 சரணாலயங்கள் தொடர்புடைய பாடப்பொருள் ஆங்கிலத்தில் Animals in the jungle கட்டகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது
வகுப்பு 3 - ஒருங்கிணைக்கப்படாத பாடப்பகுதிகள் பாடம் தலைப்பு கட்டகம் ( ஆசிரியர் கையேட்டில் ) மொத்த செயல்பாடுகள் 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 1 3 3 மாவட்ட நிருவாகம் 2 1 வகுப்பு 3 , கணக்குப் பாட ஆசிரியர் கையேட்டின் இறுதிப்பகுதியில் ஒருங்கிணைக்கப்படாத சமூக அறிவியல் பாடப்பகுதிக்கான செயல்பாடுகளும் பாடநூல் , பயிற்சி நூல் பயிற்சிகளும் தொடர் செயல்பாடும் கொடுக்கப்பட்டுள்ளன .
மாநில அடைவு ஆய்வில் இடம்பெற்ற சமூக அறிவியல் ( 4 & 5 ) பாட கற்றல் விளைவுகள் மற்றும் வினாக்கள்
மாநில அடைவு ஆய்வில் சமூக அறிவியல் பாடத்தில் கற்றல் விளைவு வினா எண் கற்றல் விளைவு 39, 43, 45 ( வினாத் தொகுப்பு - 51) EVS 505 நில அமைப்பு முறை, காலநிலை, வளங்கள் (உணவு, நீர், இருப்பிடம், வாழ்வாதாரம் ) மற்றும் கலாச்சார வாழ்க்கை ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை நிலைநாட்டுதல் . ( தொலைதூர / கடினமான பகுதிகளான வெப்ப / குளிர் பாலைவனங்களில் வாழ்க்கை)
மாநில அடைவு ஆய்வில் சமூக அறிவியல் பாட வினாவும் அடைவு விழுக்காடும் வினா எண் வினா அடைவு விழுக்காடு 39 52 கொடுக்கப்பட்டுள்ள நிலவரைபடத்தை உற்றுநோக்கி நிழலிட்டுக் காட்டப்பட்டுள்ள நிலத்தோற்றத்தைக் கண்டறிக . சமவெளி பீடபூமி மலை பாலைவனம்
வினா எண் வினா அடைவு விழுக்காடு 43 59 கோடை விடுமுறை முடிந்து வகுப்பறையில் இணைந்த தோழிகளுள் கவிதா சென்னைக்கும் பேபி ஊட்டிக்கும் சென்று வந்ததாகக் கூறினர் . இவர்கள் சென்று வந்த இடங்கள் எந்த நில அமைப்பைச் சார்ந்தவை என்று நீ கருதுகிறாய் ? மலைகள் , பீடபூமிகள் மலைகள் , ஆற்றுப்படுகை கடற்கரை , மலைகள் கடற்கரை,பீடபூமிகள்
வினா எண் வினா அடைவு விழுக்காடு 45 45. கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானதைத் தெரிவு செய்க . தமிழ்நாடு கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் கொண்டுள்ளது . கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலைத்தொடரில் சந்திக்கின்றன . நீலகிரி மலைத்தொடரில் உள்ள உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும் . இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா தமிழ்நாட்டில் உள்ளது . 58
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட ஒரு வினாவும் ஆசிரியர் கையேட்டில் உள்ள செயல்பாடும் - ஒரு பார்வை
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட ஒரு வினாவும் ஆசிரியர் கையேட்டில் உள்ள செயல்பாடும் கற்றல் விளைவு EVS 505 நிலஅமைப்பு முறை, காலநிலை, வளங்கள் (உணவு,நீர், இருப்பிடம், வாழ்வாதாரம்) மற்றும் கலாச்சார வாழ்க்கை ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை நிலைநாட்டுதல்.(தொலைதூர / கடினமான பகுதிகளான வெப்ப , குளிர் பாலைவனங்களில் வாழ்க்கை) 39. கொடுக்கப்பட்டுள்ள நில வரைபடத்தை உற்றுநோக்கி நிழலிட்டுக் காட்டப்பட்டுள்ள நிலத்தோற்றத்தைக் கண்டறிக . சமவெளி பீடபூமி மலை பாலைவனம்
பருவம் 2 வகுப்பு 4 கட்டகம் 2 : தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
மாணவர்கள் உருவாக்கிய இயற்கை அமைப்பு நில வரைபடம்
கற்றல் விளைவை அடைவதற்கான செயல்பாடுகள் செயல்பாட்டைத் துவங்கும் முன் காலச்சுவடி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள , நீலகிரி மலை என அழைக்கப்படுவதன் காரணம் குறித்து கூற வேண்டும் . பறவையின் பயணம் குறித்த காணொலியைக் காண்பித்து இயற்கை அமைப்புப் பிரிவுகளை அறிமுகப்படுத்திய பின் கலந்துரையாட வேண்டும் . தமிழ்நாட்டில் காணப்படும் இயற்கை அமைப்புப் பிரிவுகள் குறித்த காணொலியைக் காண்பிக்க வேண்டும் . களிமண் மற்றும் வண்ணப்பொடிகள் பயன்படுத்தி , இயற்கை அமைப்பு நில வரைபடத்தில் மலை , பீடபூமி , சமவெளி மற்றும் கடற்கரை என்ற இயற்கை அமைப்பு மாதிரிகளை உருவாக்க வழிகாட்ட வேண்டும் .
பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு - 1
EVS505 நில அமைப்பு முறை, காலநிலை, வளங்கள் (உணவு , நீர் , இருப்பிடம் , வாழ்வாதாரம் ) மற்றும் கலாச்சார வாழ்க்கை ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை நிலைநாட்டுதல் . ( தொலைதூர / கடினமான பகுதிகளான வெப்ப , குளிர் பாலைவனங்களில் வாழ்க்கை) 45. கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானதைத் தெரிவு செய்க . தமிழ்நாடு கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் கொண்டுள்ளது . கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலைத்தொடரில் சந்திக்கின்றன . நீலகிரி மலைத்தொடரில் உள்ள உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும் . இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா தமிழ்நாட்டில் உள்ளது . மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினா மற்றும் கற்றல் விளைவு
பயிற்சி நூல் பயிற்சிகள்
மாணவர்கள் உருவாக்கிய இயற்கை அமைப்பு நில வரைபடம்
கற்றல் விளைவை அடைவதற்கான செயல்பாடுகள் செயல்பாட்டைத் துவங்கும் முன் காலச்சுவடி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள நீலகிரி மலை என அழைக்கப்படுவதன் காரணம் குறித்து கூற வேண்டும் . பறவையின் பயணம் குறித்த காணொலியைக் காண்பித்த பின் கலந்துரையாட வேண்டும் . தமிழ்நாட்டின் இயற்கை அமைப்புப் பிரிவுகள் குறித்த காணொலியைக் காண்பிக்க வேண்டும் . இயற்கை அமைப்பு நிலவரைபடத்தில் இயற்கை அமைப்புப் பிரிவுகளை உருவாக்கியபின் , சொல்லட்டைகளை செருக வேண்டும் .( மேற்குத் தொடர்ச்சி மலை,கிழக்குத் தொடர்ச்சி மலை,பீடபூமிகள்,சமவெளிகள்,கடற்கரை )
பங்கேற்பாளர் கட்டகப் பகுப்பாய்வு-2
EVS 505 நில அமைப்புமுறை, காலநிலை,வளங்கள் (உணவு,நீர், இருப்பிடம் , வாழ்வாதாரம் ) மற்றும் கலாச்சார வாழ்க்கை ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை நிலைநாட்டுதல்.(தொலைதூர / கடினமான பகுதிகளான வெப்ப ? குளிர் பாலைவனங்களில் வாழ்க்கை) 43. கோடை விடுமுறை முடிந்து வகுப்பறையில் இணைந்த தோழிகளுள் கவிதா சென்னைக்கும் பேபி ஊட்டிக்கும் சென்று வந்ததாகக் கூறினர் . இவர்கள் சென்று வந்த இடங்கள் எந்த நில அமைப்பைச் சார்ந்தவை என்று நீ கருதுகிறாய் ? மலைகள் , பீடபூமிகள் மலைகள் , ஆற்றுப்படுகை கடற்கரை , மலைகள் கடற்கரை,பீடபூமிகள் மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினா மற்றும் கற்றல் விளைவு
வகுப்பு 4 : கட்டகம் 2 : தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு செயல்பாடு 2
பயிற்சி நூல் பயிற்சிகள்
கற்றல் விளைவை அடைவதற்கான செயல்பாடுகள் மாணவர்கள் உருவாக்கியிருக்கும் இயற்கை அமைப்பு நில வரைபடத்தில் சொல்லட்டைகளை செருகிய பின் , தமிழ்நாடு அரசியல் நில வரைபடத்துடன் ஒப்பிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள இயற்கை அமைப்புப் பிரிவுகள் குறித்து கலந்துரையாட வேண்டும் . பின்னர் தங்களது பயிற்சி நூலில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் குறிக்கச் செய்ய வேண்டும் . மாவட்டங்கள் பெயர் எழுதப்பட்ட துண்டுச்சீட்டுகளிலிருந்து ஏதேனும் ஒன்றை எடுக்கச் செய்து , அங்கு காணப்படும் இயற்கை அமைப்புப் பிரிவு குறித்து கூறச் செய்ய வேண்டும் .
தனி நிகழாய்வு (Case Study)
மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் ஒன்றியம்,PUPS விரகனூர் ஆசிரியை திருமதி.பூரணவள்ளி அவர்களின் கற்பித்தல் அணுகுமுறை தனி நிகழாய்வு (Case Study ) ஆசிரியர் இந்தச் செயல்பாட்டில் குறிப்பிட்டபடி பறவையின் பயணம் காணொலி காண்பித்து இயற்கை அமைப்புப் பிரிவுகளை அறிமுகப்படுத்தினார் . தமிழ்நாடு இயற்கை அமைப்பு காணொலி மூலம் தமிழ்நாட்டில் காணப்படும் இயற்கை அமைப்புப் பிரிவுகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர் . பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அமைப்பு நிலவரைபடத்தில் களிமண் , வண்ணப்பொடிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு மாதிரியை உருவாக்கினர் . மாணவர்களால் உருவாக்கப்பட்ட இயற்கை அமைப்பு மாதிரியில் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை , கிழக்குத் தொடர்ச்சி மலை , சமவெளி , பீடபூமி என்ற வார்த்தை அட்டைகளை உரிய இடங்களில் பொருத்தினர் .
தாங்கள் உருவாக்கியுள்ள இயற்கை அமைப்பு மாதிரியை அரசியல் நிலவரைபடத்துடன் ஒப்பிட்டு அவை அமைந்துள்ள மாவட்டங்களைக் கூறினர் , இந்தச் செயல்பாட்டின் இறுதியில் தமிழ்நாட்டின் 4 இயற்கை அமைப்புப் பிரிவுகளை அடையாளம் கண்டறிந்து கூறினர் . இயற்கை அமைப்புப் பிரிவுகளையும் அவை காணப்படும் சில மாவட்டங்களையும் கூறினர் .
ஆசிரியரின் பின்னூட்டம் ஆசிரியர் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாட்டினை , உரிய திட்டமிடுதல் மற்றும் முன் தயாரிப்புடன் செய்யும் பொழுது , சிறந்த கற்றல் அடைவைப் பெற முடிகிறது என்பது உறுதியாகிறது . இதன்மூலம் .........
சிறந்த கற்றல் அடைவு பெறுவதில் ஆசிரியர் கையேட்டின் பங்கு செய்து கற்றலின் மூலம் கிடைக்கும் அனுபவமே மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர்களின் பயிற்சி நூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன . ஆசிரியர் கையேட்டினை முழுவதும் வாசித்து உரிய முன் தயாரிப்புடன் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை மாணவர்களிடம் கொண்டு செல்வதன் மூலம் சிறந்த கற்றல் விளைவுகளை அடைய முடியும் . தொகுப்பு
சிறந்த கற்றல் விளைவை வெளிப்படுத்துவதில் பயிற்சி நூலின் பங்கு கற்றல் செயல்பாட்டின் போது மாணவர்கள் பெற்றுக் கொண்ட கற்றல் விளைவை வெளிப்படுத்தும் வகையில் பயிற்சி நூல் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன . ஒவ்வொரு செயல்பாடும் முடிந்தவுடன் , அதற்குரிய பயிற்சி நூல் செயல்பாடுகளை மாணவர்கள் செய்வதன் மூலம் பாடப்பொருள் சார்ந்த முழுப்புரிதல் ஏற்படும் . மெல்ல கற்கும் மாணவர்களும் பயிற்சி நூல் பயிற்சிகளைச் செய்வதால் , பாடக்கருத்துகளை எளிதில் புரிந்து கொள்வர் .( தேவைப்படின் , சக மாணவர்களின் உதவியுடன் )
ஆசிரியர் கையேடு பயன்பாடு இல்லையெனில் ..........................? திட்டமிடுவோம் ; செயலாற்றுவோம் ; சிறந்த கற்றல் அடைவைப் பெறுவோம்