BAHASA TAMIL TAHUN 2
இலக்கணம் : தலைப்பு ஒரு, ஓர்
தமிழ் மொழி ஆண்டு 2
Size: 171.43 MB
Language: none
Added: Oct 06, 2025
Slides: 12 pages
Slide Content
பாடம் : தமிழ் மொழி வகுப்பு : 2 மருதம் பாட ஆசிரியர் : திருமதி ஷாமளா விஸ்வநாதன்
கற்றல் தரம் 5.3.8 ஒரு , ஓர் இலக்கண மரபினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் . நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ஒரு , ஓர் இலக்கண மரபினை அறிந்து வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்தி எழுதுவர் . வெற்றி கூறுகள் என்னால் ஒரு , ஓர் பொருளை வாசித்து அதன் பயன்பாட்டினை அறிய முடியும் . என்னால் கதையை வாசித்து கதையிலுள்ள ஒரு.ஓர் பயன்பாட்டினை அறிந்துக் கூற முடியும் . என்னால் ஒரு,ஓர் தலைப்பையொட்டியப் பயிற்சியினைச் செய்ய முடியும் .
இலக்கணம் ஆண்டு 2 தலைப்பு : ஒரு , ஓர்
ஒரு – ஓர் என்பன பெரும்பாலும் வேறுபாடு இல்லாமலேயே மக்களால் வழங்கப்படுகின்றன . எனினும் , அவற்றை இடமறிந்து வழங்குதல் வேண்டும் . ஒரு ஓர்
எடுத்துக்காட்டு : ஒரு க தவு ஒரு மா லை ஒரு ச ட்டி ஒரு உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும் . க, மா , ச ஆகியவை உயிர்மெய் எழுத்து . ஆதலால் அந்த எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் ஒரு வந்துள்ளது .
ஓர் உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும் . எடுத்துக்காட்டு : ஓர் அ ணில் ஓர் ஆ டு ஓர் ஓ டம் அ, ஆ, ஓ ஆகியவை உயிர் எழுத்து . ஆதலால் அந்த எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் ஓர் வந்துள்ளது .
கதையை வாசித்திடுக ; ஒரு மற்றும் ஓர் பயன்பாட்டை அறிக .
மீள்பார்வை
குமிழி வரைப்படத்தைப் பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக .
காலியான இடத்தை ஒரு மற்றும் ஓர் சொல்லைக் கொண்டு நிரப்புக . பயிற்சி நூல் பக்கம் 87