094supreethaTSvic
968 views
13 slides
Nov 23, 2021
Slide 1 of 13
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
About This Presentation
anitha reva
Size: 10.73 MB
Language: none
Added: Nov 23, 2021
Slides: 13 pages
Slide Content
பறவைகள் This Photo by Unknown Author is licensed under CC BY-SA This Photo by Unknown Author is licensed under CC BY-SA This Photo by Unknown Author is licensed under CC BY-SA-NC
கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை . இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன . இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் ( அலகு ) கொண்டன . ஆஸ்திரேலியாவிலும் , தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன . தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் . கிளி This Photo by Unknown Author is licensed under CC BY-SA This Photo by Unknown Author is licensed under CC BY-SA
அன்ன பறவை அனாடிடே " குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பறவையாகும் . இவற்றில் 6-7 வகையானவை உண்டு . அவை " அனாசெரினே " எனும் துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவை . எனினும் அவை வழமையான அன்னங்களிலிருந்து வேறுபட்டவை . இவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதன் மூலம் இனம்பெருக்குகின்றன . இவை 3 தொடக்கம் 8 வரை முட்டையிடுகின்றன . இவை தனது குறித்த ஜோடியுடனேயே வாழ்க்கை நடத்தும் . சில வேளைகளில் ஜோடிகள் பிரிவதும் உண்டு . This Photo by Unknown Author is licensed under CC BY This Photo by Unknown Author is licensed under CC BY-SA-NC
மயில் , பசியானிடே குடும்பத்தின் , பேவோ ( Pavo ) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் ( தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில் , மற்றும் பச்சை மயில் )[1][2], Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த , ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும் .[2][3] மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது . ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும் . ஆண் மயில்கள் அழகிய , பளபளப்பான , நீலம் கலந்த பச்சை நிறமுடையவை This Photo by Unknown Author is licensed under CC BY-SA-NC மயில்
வீட்டுப் புறா (Homing Pigeon) என்பது வீட்டில் வளர்க்கப்படும் புறாவின் ஒரு வகை ஆகும் . இது மாடப் புறாவில் இருந்து பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவானதாகும் . இவை மிகவும் நீண்ட தூரங்களுக்கு பயணித்துத் திரும்பும் ஆற்றல் கொண்டவையாகும் .[1] இவை புவியின் காந்தப் புலத்தைப் பயன்படுத்துகின்றன புறா This Photo by Unknown Author is licensed under CC BY-SA
வாத்து வாத்து (Duck) ஒரு பறவை ஆகும் . பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன . வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை . குறிப்பாக ஆசிய மக்கள் வாத்துக்களை உண்கிறார்கள் . வாத்து ஒரு நீர்வாழ் கோழியினமாகும் . இது சிறந்த நேர்த்தியான , அழகான நீண்ட கழுத்து கொண்ட பறவையாகும் . மனிதர்கள் இறைச்சி , முட்டை மற்றும் இறகுகள் போன்றவற்றிருக்கு வளர்த்து வருகின்றனர் .
காகம் காகம் அல்லது காக்கை (உயிரியல் வகைப்பாடு: Corvus ) என்பது கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமான இது பொதுவாக கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இலத்தீன் மொழியில் 'கார்வுச்' என்ற சொல்லுக்கு 'பெரிய உடலமைப்பு கொண்டவை' என்று பொருள். காகங்களில் 40 இனங்கள் உள்ளன. சிறிய புறா அளவிலிருந்து பெரிய 'ஜாக்டா' எனப்படும் இனம் வரை இவற்றில் அடங்கும். இது பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது. This Photo by Unknown Author is licensed under CC BY-NC-ND
கழுகு (eagle) என்பது அக்சிபிட்ரிடே ( accipitridae ) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த , வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும் . யூரேசியா , ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன .[1] இவற்றுள் இரண்டு வகைகள் ( வெண்தலைக் கழுகு , பொன்னாங் கழுகு ) ஐக்கிய அமெரிக்கா , கனடா நாடுகளிலும் , ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா , தென் அமெரிக்கா ஆகியவற்றிலும் , மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும் காணப்படுகின்றன . This Photo by Unknown Author is licensed under CC BY This Photo by Unknown Author is licensed under CC BY-SA கழுகு
பெரும் பூநாரை (Greater Flamingo) என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும் . இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு என்பதாகும் . நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும் , நீண்டு வளைந்த கழுத்தும் , குறுகிய வளைந்த அலகும் இருக்கும் . கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும் . நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும் . இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை . நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை , தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள் , பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று . இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது . This Photo by Unknown Author is licensed under CC BY-SA-NC This Photo by Unknown Author is licensed under CC BY-SA-NC நாரை
குயில் (cuckoos) என்பது குகுலிடே ( Cuculidae ) பறவைகளின் ஒரு குடும்பமாகும் . இது குகுலிபோமமிஸ் (Cuculiformes) வரிசையில் உள்ள தனி தொகுதியாகும் .[1][2][3] குயில் குடும்பம் பொது அல்லது ஐரோப்பியக் குயில் , தெரு ஓட்டக்காரன் , குயில்கள் , பூங்குயில்கள் , கோவுவா , குக்குகல் , அனி ஆகியவற்றை உட்கொண்டுள்ளது.குயில் (cuckoos) என்பது குகுலிடே ( Cuculidae ) பறவைகளின் ஒரு குடும்பமாகும் . இது குகுலிபோமமிஸ் (Cuculiformes) வரிசையில் உள்ள தனி தொகுதியாகும் .[1][2][3] குயில் குடும்பம் பொது அல்லது ஐரோப்பியக் குயில் , தெரு ஓட்டக்காரன் , குயில்கள் , பூங்குயில்கள் , கோவுவா , குக்குகல் , அனி ஆகியவற்றை உட்கொண்டுள்ளது . குயில் This Photo by Unknown Author is licensed under CC BY-SA
அர்டெயிடே குடும்பத்தினைச் சார்ந்த பறவைகளாகும் . ஹெரான்களில் ஒரு வகை கொக்குகள் என்றும் அறியப்படுகின்றன . இவை வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் இறகுகளைக் கொண்டன . இனப்பெருக்க காலத்தில் மென்மையான புகைத்திரை ( பொதுவாகப் பால் வெள்ளை ) போன்ற இறகுகளைக் கொண்டுள்ளன . கொக்குகள் ஹெரான்களிலிருந்து உயிரியல் ரீதியாக வேறுபட்ட குழு அல்ல , அதே கட்டமைப்பைக் கொண்டுள்ளன . This Photo by Unknown Author is licensed under CC BY-NC-ND This Photo by Unknown Author is licensed under CC BY-SA-NC கொக்கு
ஆந்தை ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும் , காதுகளையும் , சொண்டையும் , மற்றும் facial disk என அழைக்கப்படும் , தெளிவாகத் தெரியும் , கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது . ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும் , அவற்றின் கண்கள் , அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன . இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது . இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது .