“தமிழ் மொழியும் இலக்கியமும்” என்ற இந்த வழங்கல், தமிழ் மொழியின் சிறப்பும் அதன் இலக்கியப் பாரம்பரியமும் பற்றிய �...
“தமிழ் மொழியும் இலக்கியமும்” என்ற இந்த வழங்கல், தமிழ் மொழியின் சிறப்பும் அதன் இலக்கியப் பாரம்பரியமும் பற்றிய விரிவான அறிமுகத்தை வழங்குகிறது. இதில், மொழி என்பது இலக்கியத்தின் அடிப்படை கருவி என்பதை விளக்கி, காலம், இடம், இலக்கிய வகை, படைப்பாளியின் பார்வை, கதைமாந்தர் பின்னணி, வாசகர் வட்டாரம் போன்ற அம்சங்கள் இலக்கிய மொழிநடையை எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பதையும் எடுத்துரைக்கிறது. சங்க காலம் முதல் பல்லவர், சோழர், நாயக்கர் காலம் வரை தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுப் பயணத்தை, முக்கிய படைப்பாளிகள் — திருவள்ளுவர், இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார், பாரதியார், புதுமைப்பித்தன் போன்றோரின் படைப்புகளுடன் இணைத்து விளக்குகிறது. கவிதை, சிறுகதை, புதினம், பக்தி இலக்கியம் போன்ற பல்வேறு வகைகளின் மொழிநடை வேறுபாடுகள், வாசகர்களின் தரத்திற்கேற்ப ஏற்படும் மாற்றங்கள், மற்றும் இலக்கியத்தின் சமூக, அரசியல், பண்பாட்டு பின்னணிகள் பற்றிய புரிதலை இது வழங்குகிறது.
சிலேடை அணி இது சொல் அணிகளில் ஒன்று. ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் இரு பொருள் தரும் வகையில் பயன்படுத்தப்படுவதை குறிக்கும் . உதாரணம் : 1. செவ்வாய் = சிவந்த வாய் செவ்வாய் கோள் 2. திருக்கை = அழகான கை ஒரு வகை மீன்
பொருள் : 1. அம்மா + வாணை = அம்மா வருதல் 2. அம்மா + ஆணை = அம்மா மீது ஆணையாக அம்மாவாணை
பொருள் : 1. புத்தி + இலாதவன் = அறிவு இல்லாதவன் 2. புத்தியில் + ஆதவன் = அறிவிலே சூரியனைப் போன்றவன் புத்தியிலாதவான்
1. பழம் + கள் = பழைய கள் 2. பழம் + கள் = கனிகள் பழங்கள்
பொருள் 1. தா + வரம் = வரம் ஒன்று தா 2. தாவரம் = மரம் செடி கொடி முதலிய தாவரங்கள் தாவரம்