எண்ணும் எழுத்தும் - கணக்கு மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி பருவம் – 2 2025 - 2026
ஏதேனும் நான்கு குச்சிகளை ஒருமுறை மட்டும் நகர்த்தி மூன்று சதுரங்களை அமைக்கலாமே ! ஆயத்தப்படுத்துதல்
குழந்தைகள் மகிழ்வுடன் பங்கேற்று விரும்பிக் கற்கும் செயல்பாடுகள். வாழ்க்கைச் சூழலோடு இணைந்த பயன்மிகு கற்றல் அடைவை நோக்கிய பயிற்சிகள். மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்ட வகுப்பறை மாற்றம். குறைதீர் கற்பித்தல் தேவைப்படும் குழந்தைகளுக்கான நெகிழ்வுத் தன்மை கொண்ட செயல்பாடுகள். எண்ணும் எழுத்தும் - கணித வகுப்பறையில்...
மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS) – 2025 மாவட்ட வாரியான சராசரி முடிவுகள்
வகுப்பு - 3 வகுப்பு - 5 மாநில சராசரியை விட அதிகம் பெற்ற மாவட்டங்கள்
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான கற்றல் விளைவுகளும் மாணவர்களின் அடைவும் . வகுப்பு - 3
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான கற்றல் விளைவுகளும் மாணவர்களின் அடைவும் . வகுப்பு - 3
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாக்கள் . வகுப்பு - 3
வகுப்பு - 3 மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாக்கள் .
மாநில அளவிலான அடைவுத் தேர்வில் கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை எண்களை ஒப்பிட்டு அறிந்து கொள்வதிலும் வாழ்க்கைச் சூழலோடு இணைந்த கணக்குகளைத் தீர்ப்பதிலும் அலகுகளை இனமாற்றம் செய்வதிலும் மாணவர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது . இதனைச் சரிசெய்யும் பொருட்டு , எண்ணும் எழுத்தும் கணக்குப் பாடத்தில் செய்து கற்றலுக்கும் வாழ்க்கைச் சூழலோடு இணைந்த கணக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது . SLAS - 2025
SLAS 2025 – கற்றல் விளைவுகள் (பருவம் - 2) வி னா எண் - 2 7 மாணவர்கள் அடைவு - 48% M313: பொருள்களின் எடையினை எளிய தராசைக் கொண்டு கிராம் மற்றும் கிலோகிராம் போன்ற திட்ட அலகுகளைப் பயன்படுத்திக் கண்டறிதல் வி னா எண் - 2 8 மாணவர்கள் அடைவு - 56% M204: ஈரிலக்க எண்களின் கூட்டல் அடிப்படையில் அன்றாட வாழ்வில் சூழ்நிலை / பிரச்சினைகளைத் தீர்த்தல்
SLAS 2025 – கற்றல் விளைவுகள் (பருவம் - 2) வி னா எண் - 2 9 மாணவர்கள் அடைவு - 46% M205: ஈரிலக்க எண்களின் கழித்தல் அடிப்படையிலான அன்றாட வாழ்வியல் சூழ்நிலைகளைக் கையாளுதல் வி னா எண் - 30 மாணவர்கள் அடைவு - 59% M318: எளிய வடிவங்கள் மற்றும் எண்களின் அமைப்பு முறைகளை விரிவாக்குதல்
மாநில அடைவு ஆய்வில் மாணவர்களின் அடைவு மிகக் குறைவாக உள்ள ஒரு வினாவும் எண்ணும் எழுத்தும் கணக்குப் பாட அணுகுமுறையும் …
வி னா எண் – 2 9 மாணவர்கள் அடைவு - 46% பெரிய எண் மற்றும் சிறிய எண்ணை அடையாளம் காண்பதில் தடுமாற்றம் . எண்களின் இடமதிப்பைப் புரிந்து கொள்ள முடியாமை. இனமாற்றம் செய்வதில் குழப்பம். பூச் சி யத்திலிருந்து ஓர் எண்ணைக் கழிப்பதில் சிரமம். அன்றாட வாழ்க்கைச் சூழல் சார்ந்த கணக்குகளில் கழித்தலுக்கான முக்கியச் சொற்களான மீதம், வேறுபாடு , வித்தியாசம் ஆகியவற்றைக் கண்டறிவதில் தடுமாற்றம். M205: ஈரிலக்க எண்களின் கழித்தல் அடிப்படையிலான அன்றாட வாழ்வியல் சூழ்நிலைகளைக் கையாளுதல் இக்கற்றல் விளைவை அடைவதில் மாணவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள்
இச்செயல்பாட்டில், வட்டத்தில் உள்ள எண்ணட்டைகளில் இரண்டு எண்ணட்டைகளை எடுக்கச் செய்து பெரிய எண் அட்டை வைத்துள்ள மாணவரிடம் இருந்து சிறிய எண் அட்டை வைத்துள்ள மாணவர் தனது அட்டையில் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப மணிகளைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மணிகள் மற்றும் மணிச்சரங்களைப் பயன்படுத்தி க் கழித்தலைச் செய்யும்பொழுது பத்து உதிரி மணிகளுக்குப் பதில் ஒரு பத்து மணிச்சரத்தினைப் பயன்படுத்தி இனமாற்றம் செய் வர் . ஆசிரியர் கையேட்டில் …
மொட்டு - அரும்பு நிலைப் பயிற்சிகள் ( பாடநூல் மற்றும் பயிற்சிநூலில் )
மொட்டு நிலைப் பயிற்சிகள் - பாடநூலில்
எண்ணும் எழுத்தும் கணித வகுப்பறையில் , ஒவ்வொரு செயல்பாடும் மாணவர்கள் தாங்களே கணக்குகளை உருவாக்கித் தீர்க்கும் வகையிலும் பயிற்சிகளானது மேம்படுத்தப்பட்ட வடிவில் நிலை வாரியாகவும் இருப்பதால் கற்றல் அடைவு எளிமையாகிறது .
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான கற்றல் விளைவுகளும் மாணவர்களின் அடைவும் . வகுப்பு - 5
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான கற்றல் விளைவுகளும் மாணவர்களின் அடைவும் . வகுப்பு - 5
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாக்கள் . வகுப்பு - 5
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாக்கள் . வகுப்பு - 5
மாநில அடைவு ஆய்வில் கேட்கப்பட்ட வினாக்கள் . வகுப்பு - 5
வி னா எண் - 21 மாணவர்கள் அடைவு - 53% M404- காகிதமடிப்பு மற்றும் பொருள்கள் சேகரித்தல் மூலம் கொடுக்கப்பட்ட படத்தின் முழுப்பகுதியில் அரை , நான்கில் ஒன்று , நான்கில் மூன்று ஆகியவற்றைக் கண்டறிதல் M405 - எண்களைப் பயன்படுத்தி பின்னத்தினை அரை , நான்கில் ஒன்று , நான்கில் மூன்று என்று வெளிப்படுத்துதல் . வி னா எண் – 24 மாணவர்கள் அடைவு - 58% M420 – சமச்சீர் தன்மையை அடிப்படையாகக் கொண்ட வடிவியல் அமைப்பு முறையினை உற்று நோக்குதல் இனம் காணுதல் மற்றும் நீட்டித்தல் . SLAS 2025 – கற்றல் விளைவுகள் (பருவம் - 2)
வி னா எண் - 25 மாணவர்கள் அடைவு - 58% M502-எண்களின் இடமதிப்பை ப் புரிந்து கொண்டு 1000 க்கு மேற்பட்ட எண்களில் நான்கு கணித அடிப்படை செயல்பாடுகளை மேற்கொள்ளல் வி னா எண் - 27 மாணவர்கள் அடைவு - 54% M509 – கோணங்களை செங்கோணம் , குறுங்கோணம் , விரிகோணம் என வகைப்படுத்துதல் அக்கோணங்களை வரைதல் மற்றும் வடிவொற்றி வரைதல் . SLAS 2025 – கற்றல் விளைவுகள் (பருவம் - 2)
வி னா எண் - 27 மாணவர்கள் அடைவு - 54% கோணங்களின் வகைகளுக்கான வரையறைகள் மற்றும் அளவுகளைப் புரிந்து கொள்வதில் குழப்பம். கோணங்கள் பற்றிய அறிவை அன்றாட வாழ்க்கைச் சூழலுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதில் தடுமாற்றம். இக்கற்றல் விளைவை அடைவதில் மாணவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் : M509 – கோணங்களை செங்கோணம் , குறுங்கோணம் , விரிகோணம் என வகைப்படுத்துதல் அக்கோணங்களை வரைதல் மற்றும் வடிவொற்றி வரைதல் . இக்கற்றல் விளைவை அடைவதில் மாணவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள்
ஆசிரியர் கையேட்டில் … இச்செயல்பாட்டில் , உடற்பயிற்சி செய்வது போல் மாணவர்களைச் செய்ய வைத்து அதன் மூலம் கோணங்களின் வகைகளைத் தாங்களாகவே அறிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. மேலும் மாதிரிக் கடிகாரத்தில் ஒவ்வொரு மணி நேரமாகவும் இரண்டிரண்டு மற்றும் மும்மூன்று மணி நேரங்களாகவும் அமைத்துக் காட்டி அதில் உருவாகும் கோணங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் செயல்பாடானது அமைக்கப்பட்டிருக்கிறது.
ஐந்தாம் வகுப்பு - பயிற்சி நூலில்
ஐந்தாம் வகுப்பு - பாடநூலில்
ஒவ்வொரு செயல்பாடும் மாணவர்களை வாழ்க்கைச் சூழலுடன் இணைந்து கற்கும் வகையிலும் பயிற்சிகளானது அரும்பு , மொட்டு , மலர் மற்றும் வகுப்பு நிலையிலும் இருப்பதால் எளிமையிலிருந்து படிப்படியாக அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.
திறன் அடிப்படை மதிப்பீட்டு ஆய்வு
திறன் - அடிப்படை மதிப்பீட்டு ஆய்வு ( வகுப்பு 6&7)
தனிநபர் ஆய்வு
ஐந்தாம் வகுப்பில் அளவைகள் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது பத்மா ஸ்ரீ என்ற மாணவி தனது அம்மாவுடன் கடைக்குப் பழங்கள் வாங்கச் சென்றிருந்த பொழுது 3 கிலோ அளவில் பழங்கள் கேட்டதற்கு கடைக்காரர் 2 கிலோ 800 கிராம் அளவில் பழங்களைக் கொடுத்து விட்டு 3 கிலோவிற்குப் பணம் கேட்கையில் இன்னும் கூடுதலாக 200 கிராம் வேண்டும் என தான் கூறியவுடன் கடைக்காரர் தன்னை வியப்புடன் பார்த்ததாகக் கூறினாள். அத்தருணம் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு செயல்பாடுகளானது வாழ்க்கைச் சூழலை தொடர்புபடுத்தும் வகையில் இருப்பதால் புரிதலுடன் கூடிய கற்றலுக்கு வழிவகுக்கிறது. ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஏழூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கோ . சுமதி என்ற ஆசிரியரின் வகுப்பறை அனுபவம்.
இது உங்கள் நேரம் … குழு – 1 : கட்டகம் 2 ( வகுப்பு 1-3) குழு – 2 : கட்டகம் 3 ( வகுப்பு 1-3) குழு – 3 : கட்டகம் 5 ( வகுப்பு 1-3) குழு – 4 : கட்டகம் 1 ( வகுப்பு 4&5) குழு – 5 : கட்டகம் 3 ( வகுப்பு 4&5) குழு – 6 : கட்டகம் 4 ( வகுப்பு 4&5)
இக்கட்டகத்தில் இடம்பெற்றுள்ள நிலைவாரியான கற்றல் விளைவுகள் எத்தனை? SLAS - ல் இடம்பெற்றுள்ள கற்றல் விளைவுகளில் இக்கட்டகத்துடன் தொடர்புடைய கற்றல் விளைவுகள் எந்தெந்த நிலைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன ? SLAS- - உடன் தொடர்புடைய கற்றல் விளைவுகளுக்கான செயல்பாடுகள் யாவை? அச்செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு செயல்பாட்டினை விளக்குக . . அச்செயல்பாட்டிற்கான நிலைவாரியான பயிற்சிநூல் பயிற்சி எண்கள் யாவை? கட்டகப் பகுப்பாய்வு வினாக்கள்
கட்டகம் - 2 எண்களை அறிவேன் - I கட்டகப் பகுப்பாய்வு அரும்பு - 3, மொட்டு - 3, மலர் – 2 அரும்பு - 2, மொட்டு – 2 செய்து மகிழ்வோம் - 4 மற்றும் 5 செய்து மகிழ்வோம் - 4 மாணவர்கள் , இருவேறு வண்ண மூடிகளை ஒன்றுகள் மற்றும் பத்துகள் வட்டத்தில் வீசும் பொழுது உருவாகும் எண்களை ஒப்பிட்டு பெரிய எண் - சிறிய எண் கருத்தை அறிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. செய்து மகிழ்வோம் – 5 அரும்பு நிலை மாணவர்களை 20 வரையிலான எண்களின் பதக்க மாலைகளை அணிந்துகொண்டு அடுத்தடுத்த மூன்று எண்களின் தொகுப்புகளாக , தொடர்வண்டி போல் நிற்கச் செய்து சிக்கு புக்கு வண்டி...சிக்கு புக்கு வண்டி...இது முன்னி தொடரி வண்டி... எனப் பாடிக்கொண்டே முந்தைய எண் - இடைப்பட்ட எண் - அடுத்த எண் ஆகிய கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. மொட்டுநிலை மாணவர்கள் குச்சிக்கட்டுகள் மற்றும் உதிரிக்குச்சிகளை எண்ணிக்கைக்கு ஏற்ற எண்ணிக்கையில் சிறியதிலிருந்து பெரியதாகவோ பெரியதிலிருந்து சிறியதாகவோ அடுக்கிக்காட்டி ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசையை அறிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. 5. செய்து மகிழ்வோம் - 4 மொட்டு – 2.5
செய்து மகிழ்வோம் – 5 மொட்டு – 2.6, 2.7 குழு – 1 வகுப்பு (1-3)
கட்டகம் - 3 எண்களை அறிவேன் - I I கட்டகப் பகுப்பாய்வு அரும்பு - 1, மொட்டு - 2 & மலர் – 2 அரும்பு - 1, மொட்டு – 2 செய்து மகிழ்வோம் – 2, 4 மற்றும் 6 செய்து மகிழ்வோம் – 2 நீலம் மற்றும் சிவப்பு வண்ணக் குச்சிகளைப் பயன்படுத்தி 99-க்குள் இனமாற்றத்துடன் கூட்டலை அறிவர் . அப்பொழுது 10 நீலவண்ணக் குச்சிகளுக்குப் பதில் ஒரு சிவப்பு வண்ணக் குச்சியை இனமாற்றம் செய்து கொள்வர் . செய்து மகிழ்வோம் - 4 அரும்பு நிலை மாணவர்கள் ஆணிமணிச் சட்டத்தில் நீலவண்ண மற்றும் சிவப்புவண்ண மணிகளைப் பயன்படுத்திக் கூட்டலை அறிவர் . செய்து மகிழ்வோம் – 6 மொட்டு நிலை மாணவர்கள் வட்டத்தில் உள்ள 99 - க்குள்ளான எண்ணட்டைகளில் இரு எண்ணட்டைகளை எடுத்து தாங்களாகவே கணக்குகளை உருவாக்கி மணிகள் மற்றும் மணிச்சரங்களைப் பயன்படுத்தி கழித்தலை மேற்கொள்வர் . அப்பொழுது 10 உதிரிமணிகளுக்குப் பதில் ஒரு பத்து மணிச்சரத்தினை இனமாற்றம் செய்துகொள்வர் . 5. செய்து மகிழ்வோம் - 2 மொட்டு – 3.1
செய்து மகிழ்வோம் – 4 மொட்டு – 3.3, 3.4 செய்து மகிழ்வோம் – 6 மொட்டு – 3.7 குழு – 2 வகுப்பு (1-3)
கட்டகம் - 5 அளவைக ளை அறிவேன் கட்டகப் பகுப்பாய்வு அரும்பு – 2, மலர் – 2 மலர்– 2 செய்து மகிழ்வோம் – 1 மற்றும் 4 செய்து மகிழ்வோம் – 1 மலர்நிலை மாணவர்கள் தராசில் பெரிய பாக்கெட்டின் எடைக்கு ஏற்ப சிறிய பாக்கெட்டுகளை வைத்தும் வட்டங்களில் குதித்தும் கிராம் - கிலோகிராம் இனமாற்றத்தை அறிந்து கொள்வர் . செய்து மகிழ்வோம் - 4 மலர் நிலை மாணவர்கள் மாதிரிக் கடிகாரத்தில் பெரிய மற்றும் சிறிய குச்சிகளைப் பயன்படுத்தி 1 முதல் 12 மணி வரையிலான மணிகளை அமைத்துக் காட்டுவர் . 5. செய்து மகிழ்வோம் - 1 மலர் (அரும்பு) – 5.1 & மலர் (மொட்டு) – 5.2
செய்து மகிழ்வோம் – 4 மலர் (அரும்பு) - 5.9 & மலர் (மொட்டு) - 5.10 குழு – 3 வகுப்பு (1-3)
கட்டகம் - 1 எண்கள் கட்டகப் பகுப்பாய்வு நான்காம் வகுப்பு – 4; ஐந்தாம் வகுப்பு -4 நான்காம் வகுப்பு – 4 செயல்பாடு – 1,2,3 மற்றும் 4 4. செயல்பாடு- 4 நான்காம் வகுப்பு மாணவர்கள் மாதிரி பொம்மைக் கடையை அமைத்துக்காட்டி தாங்கள் வாங்கும் பொருள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விலையைக் கண்டறிந்து வாழ்வியல் பெருக்கலை அறிந்து கொள்வர் . 5. நான்காம் வகுப்பு 1.12, 1.13, 1.14, 1.15 குழு – 4 வகுப்பு ( 4&5 )
கட்டகம் - 3 அளவைகள் கட்டகப் பகுப்பாய்வு நான்காம் வகுப்பு – 5; ஐந்தாம் வகுப்பு -5 நான்காம் வகுப்பு – 2 ஐந்தாம் வகுப்பு -3 செயல்பாடு – 2,3 மற்றும் 4 4. செயல்பாடு - 2 நிறுத்தல் அளவைகள் எழுதப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தி மாதிரிக் கடைகளில் காய்கறிகளை வாங்கச்செய்து அதன்மூலம் வாழ்க்கைச் சூழல் தொடர்பான கணக்குகளில் நிறுத்தல் அளவைகளில் கூட்டல் மற்றும் கழித்தலை அறிந்து கொள்வர் .. 5. நான்காம் வகுப்பு 3.5 முதல் 3. 8 முடிய ஐந்தாம் வகுப்பு 3.4 முதல் 3. 9 முடிய குழு – 5 வகுப்பு ( 4&5 )
கட்டகம் - 4 பின்னங்கள் கட்டகப் பகுப்பாய்வு நான்காம் வகுப்பு – 3; ஐந்தாம் வகுப்பு -4 நான்காம் வகுப்பு – 3 செயல்பாடு – 1,2 மற்றும் 3 4. செயல்பாடு- 1 நான்காம் வகுப்பு மாணவர்கள் சம பாகங்களாகப் பிரிக்கக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி பின்னங்களை உருவாக்கி, பகுதி மற்றும் தொகுதி ஆகிய கருத்துகளை புரிந்து கொள்ளும் விதமாக இருக்கிறது. 5. நான்காம் வகுப்பு 4.1 முதல் 4.4 முடிய குழு – 6 வகுப்பு ( 4&5 )
எண்ணும் எழுத்தும் கணித வகுப்பறையில் , ஒவ்வொரு செயல்பாட்டினையும் கற்பிக்கும் முன்னர் முன்கூட்டியே திட்டமிட்டு அந்த செயல்பாட்டின் தேவை, எந்த நிலை மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் போன்றவற்றை கருத்தில் கொள்வது மாணவர்களிடம் சிறப்பான அடைவினை ஏற்படுத்தும்.