காப்பியங்கள் முனைவர் ரா. பிரியா உதவிப்பேராசிரியர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி தஞ்சாவூர்
தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியம் என்பது கடல் போல் பரந்து விரிந்து கிடக்கிறது. அதில் பல வகையான இலக்கியங்கள் உள்ளன அதில் ஒன்று தான் காப்பியம் . வடமொழியில் இதனை காவியம் என்பவர் ஆங்கிலத்தில் எபிக் என்பர் . காப்பியத்தில் அறம் , பொருள் , இன்பம் , வீடு என்ற நால்வகை உறுதிப்பொருளட்களைக் கூறுவது. பெருங்காப்பியம் என்றும் இதில் எதாவது ஒன்று அல்லது இரண்டு குறைந்து வந்தால் அது சிறுகாப்பியம் எனப்படும். இவற்றை பொதுவாக காப்பியம் என்பர். பழங்கதை ஒன்றை தழுவி கதையை கவிதை (செய்யுள்) வடிவத்தில் விரித்து கூறுவது காப்பியம் எனப்படும். காப்பியத்தின் பொது இலக்கணத்தை தண்டியங்காரம் என்ற நூல் விளக்குகிறது.
தண்டியலங்கார இலக்கணம் தன்னேரில்லாதத் தலைவன் தாய், கடவுள் வாழ்த்து, மலை, கடல்,நாடு, நகர் பருவங்கள்,சூரியோதயம் சந்திரோயம் பற்றி வருணனைகள், திருமணம், முடி புனைதல், பொழில் விளையாட்டு, புதல்வர்ப்பேறு, புலவி கல்வி, மந்திராலோசனை, தூது விடுத்தல், போர் செய்தல், வாகை சூடுதல், முதலிய உறுப்புக்களைப் பெற்று, அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய பிரிவுகள் உடையதாய் எண்வகைச் சுவையும், விளங்க செய்திகளை கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். இவற்றில் ஒன்றிரண்டு குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும்.
காப்பியம் விளக்கம்
காப்பிய வகைகள் ;
பெருங்காப்பியம்
சிறுகாப்பியங்கள் ;
சிலப்பதிகாரம் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்-இளங்கோவடிகள். தமிழில் தோன்றிய முதல்காப்பியம் சிலப்பதிகாரம் சிலம்பை மையக்கருவாகக்கொண்டு விளங்குவதால் சிலப்பதிகாரம் எனப்பட்டது. இந்நூல் புகார்க்காண்டம் (10),மதுரைக்காண்டம் (13),வஞ்சிக்காண்டம்(7) என மூன்று காண்டங்களையும்,அதனுள் முப்பது காதைகளையும் உடையது. முப்பெரும் அரசுகளையும் (சேர,சோழ,பாண்டிய) முப்பெரும் நகரங்களையும் (வஞ்சி,புகார்,மதுரை) முப்பெரும் உண்மைகளையும் விளங்கும் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்பதும் பொருந்தும்.
சிலம்பு சிலம்பு கூறும் முப்பெரும் உண்மைகள் அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் சிலப்பதிகாரம் புகார்க் காண்டத்தில் 10 காதைகளையும் மதுரைக்காண்டத்தில் 13 காதைகளையும் வஞ்சிக் காண்டத்தில் 7 காதைகளையும் மூன்று காண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டுள்ளது.
மணிமேகலை
நூலின் சிறப்பு
ஆசிரியர் குறிப்பு
இரு காப்பிய வேறுபாடுகள் சமயத்தால் வேறுபட்டவை சிலம்பு சமணசமயக் காப்பியம் மணிமேகலை பௌத்த சமய காப்பியம் இளங்கோவடிகள் சமயக்கலப்பின்றி சிவபெருமான் திருமால் இந்திரன் முருகன் கொற்றவை அருகதேவன்; ஆகிற அனைத்து கடவுள்களையும் சிறப்பித்து கூறுவார். ஆனால் மணிமேகலையோ புத்த சமயத்தை மாத்திரம் போற்றுவதோடு சமண சமயத்தைக் குறைகூறவும் செய்கின்றது. சிலம்பில் தனித் தமிழ்ச் சொற்களால் ஆனது மணிமேகலை வடமொழிச் சொற்கள் அதிகம் காணப்படகிறது. மணிமேகலையில் வடமொழி பெயர்கள் (தீவதிலகை ஆபுத்திரன் சாதுவன் விசாகை)
வளையாபதி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று வளையாபதி சமண நூல் 9 ம் நூற்றாண்டு ஆசிரியர் - தெரியவில்லை 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. கிடைத்துள்ள பாடல்களை கொண்டு கதை கூறப்படுகிறது. கதைமாந்தர்கள் நவகோடி நாராயணன் (பெரும் வணிகன்) இரண்டு மனைவிகள் மகன்
குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி பௌத்தம் சார்ந்த நூல் ஆசிரியர் - நாககுத்தனார் குண்டலகேசி என்பதற்கு சுருண்டகூந்தலை உடையவள் என்று பொருள். 10 ம் நூற்றாண்டு 19 பாடல்கள் கிடைத்துள்ளது இக்காப்பியம் குண்டலகேசி விருத்தம் என்றும் குறிக்கப்படுகிறது. இந்நூலின் வரலாறு பௌத்த கதையாகிய தேரிகாதையின் 46 ஆம் அத்தியாயம் குண்டலகேசி கதையை கூறுகிறது. வாழ்க்கையின் நிலையாமையை கூறும் நூல்
சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று சோழர் காலத்தில் எழுதப்பட்டது. ஆசிரியர் - திருத்தக்கதேவர் சமண முனிவரால் இயற்றப்பட்டது 9 ம் நூற்றாண்டு என்றும் 10 நூற்றாண்டு என்றும் கருத்து விருத்தப்பாவாலான முதற் காப்பியம் 13 இலம்பகங்களையும் 3000க்கும் மேற்பட்ட செய்யுள்களை உடையது. நாமகள் இலம்பகம் முதல் முத்தி இலம்பகம் ஈறாக 13 இலம்பகங்கள் உள்ளது. இந்நூல் மணநூல் என்றும்; அழைக்கப்படுகிறது
கதைமாந்தர்கள் சச்சந்தன் ( ஏமாங்கத நாட்டில் இராசமாபுரத்ததை ஆண்ட மன்னன்) விசயை ( மன்னன் மனைவி) கட்டியங்காரன் ( அமைச்சன்) ச{வகன் ( மகன்) கந்துக்கடன் ( வளர்ப்பு தந்தை) அச்சணந்தி ( ச{வகன் ஆசிரியர்) காந்தருவத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை,விமலை, சுரமஞ்சரி,இலக்கணை (சீவகன் 8 மனைவிகள்)
ஐஞ்சிறுகாப்பிங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதி பொருள்களில் ஒன்றோ இரண்டே குறைந்து வருவது ஐஞ்சிறுகாப்பியம் எனப்படும். உதயணகுமார காவியம் நாககுமார காவியம் யசோதர காவியம் சூளாமணி நீலகேசி
உதயணகுமார காவியம் வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை கூறுகிறது. உஞ்சைக்காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் 6 காண்டங்களை உடையது. 367 விருத்தப்பாக்களால் ஆனது சமணப்பெண்துறவி ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் தெரியவில்லை இதன் காலம் 15 ம் நூற்றாண்டு
நாககுமார காவியம் நாகபஞ்சமி கதை எனவும் அழைக்கப்படுகிறது. சமணசமயக் காப்பியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை 170 விருத்தப்பாக்களால் ஆனது. 5 சருக்கங்களால் ஆனது. வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக்கதையின்சாரம், பிறவிச் சூழலில் இருந்து விடுபட்டு முத்தி பெறுவதற்குத் துறவின் இன்றியமையாமை பற்றி பேசுவதே இக்கதையின் நோக்கம் ஆகும்
யசோதர காவியம் சமண சமய காப்பியம் ஆசிரியர் வெண்ணாவலுடையார் 5 சருக்கங்களும் 320 பாடல்களும் உள்ளது. விருத்தப்பாவால் ஆனது. உயிர் கொலையை த{தென்று நிலைநாட்டவும், கருமத்தின் பயனை வற்புறுத்தவும். நீதியைப் புகட்டவும் எழுந்த இந்நூல் வடமொழிக் கதையை தழுவி எழுந்தது. இந்நூல் கூறும் ஒதய நாட்டு மன்னன் மாரிதத்தன் வரலாறு வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை
சூளாமணி சமண சமயம் ஆசிரியர் - தோலாமொழித் தேவர் 10 ம் நூற்றாண்டு 12 காண்டங்களையும் 2330 செய்யுட்களையும் உடையது. ஆரகத மகாபுராணத்தைத் தழுவியது. விருத்தப்பாவல் ஆனது திவிட்டன் விசயன் எனும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
நீலகேசி நீலகேசி தெருட்டு என்றும் வழங்கப்படும். பௌத்தசமயக் காப்பியமாகிய குண்டலகேசிக்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம் ஆசிரியர் தெரியவில்லை 10 சருக்கங்களையும் 895 செய்யுட்களையும் கொண்டுள்ளது. நீலகேசி கருத்த கூந்தலை உடையவள் என்று பொருள்படும்
கதைமாந்தர்கள் முனிச்சந்திரர் (சமண முனிவர்) சுடுகாட்டு காளி பழையனூர் நீலகேசி (பேய்) நீலகேசி சமணசமயக் கருத்துக்களை தெளிவாக உணர்ந்து தருக்க வாதத்திறமையும் பெற்றால். பௌத்த சமயத்தை சார்ந்த குண்டலகேசியுடனும் வாதிட்டு வென்று சமண சமயத் தலைவியான நீலகேசி காப்பியம் கூறும் கதை
பிம்பசாரக்கதை பௌத்த காப்பியமான இது பிம்பசாரன் என்ற மகர மன்னனது வரலாற்றைக் கூறும் காப்பியமாகும்.
மேருமேந்திர புராணம் சமணக் காப்பியம் ஆசரியர் - வாமனசாரியார் மேரு , மந்திர என்ற இரு உடன்பிறந்தாரின வாழ்க்கை வரலாற்றைக் கூறும் காப்பியம் 12 சருகக்கங்களையும் 120 செய்யுட்களையும்
கம்பராமாயண ம் கம்பராமாயணம் மேலைநாட்டுக் காவியங்களான இலியது, ஒடிசி ஆகியவற்றிற்கு இணையாகத் தமிழ்க் காவிய உலகில் சிறந்து விளங்குவது. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணம் இந்திய மொழிகள் பலவற்றிலும் தழுவலாகவும் மொழிபெயர்க்கப்பட்டும் எழுதப்பட்டுள்ளது. இவ்வகையில் தமிழில் கம்பர் இதனை இராமகாதை எனும் பெயரில் எழுதினார்.
கம்பர் ; ஊர் - சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர். தந்தையார் - ஆதித்தன் காலம் 12 ம் நூற்றாண்டு 9ம் நூற்றாண்டு என்றும் கூறுவர். காளியின் அருளால் கவிபாடும் திறம் பெற்றார். காவிரியாற்று வெள்ளத்தைத் தன் பாடல் திறத்தால் மன்னன் குலோத்துக்கனின் நன்மதிப்பிற்குப் பாத்திரமாகிய அவனது அவைக்கலப் புலவராக அமர்த்தப்பட்டார்.
கம்பர் சிறப்பு கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் கல்வியிற் பெரியவன் கம்பன் கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோர்க்கு இதயம் களியாதே போன்ற பழமொழிகள் கம்பர் சிறப்பை அறியலாம். பாரதியும் - கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று கூறுவார்.
கம்பர் பிற நூல்க ள் ஏரெழுபது , சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிற நூல்களும் எழுதியுள்ளார்.
இராமாயணம் ; பாலகாண்டம் , அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், என்று ஆறு காண்டங்களும் 113 படலங்களும் 10,500 பாடல்களும் உள்ளது 7 வது காண்டமான உத்தர காண்டம் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது.
பெரியபுராணம் பெரியபுராணம் ஆசிரியர் - சேக்கிழார் ஆண்டு – 12 ஆம் நூற்றாண்டு 63 நாயன்மார்களின் வரலாற்றை கூறுகிறது. சைவக் காப்பியம் வரலாற்று காப்பியம் என்று அழைக்க்படுகிறது.
சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகையினையும் நம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியினையும் ஆதாரமாக் கொண்டு தோன்றிய வழி நூலாகும். இதில் இரண்டு காண்டங்களும் 13 சருக்கங்களும் 4287 பாடல்களும் உள்ளன. இந்நூலுள் 63 தனியடியார்கள் பற்றியும் ஒன்பது தொகையடியார்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
சேக்கிழார் ; தொண்டை நாட்டியுலுள்ள புலியூர்க் கோட்டத்தில் குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் தோன்றியவர். இயற்பெயர் - அருண்மொழித்தோவர் 12 ம் நூற்றாண்டில் அநபாயன் எனற சிறப்பு பெயருடன் சோழநாட்டை ஆண்ட 2 ம் குலொத்துங்கனின் முதலமைச்சராய் திகழ்ந்தவர். சோழனால் உத்தம சோழப்பல்லவராயன் எனும் பட்டமளித்துப் பாராட்டப்பட்டார்.
கந்தபுராணம் ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார் சைவமரபில் தோன்றியவர் 12 ம் நூற்றாண்டு வடமொழியிலுள்ள சிவசங்கரன் கதையில் கூறப்படும் கந்தனின் வரலாற்றை இது தமிழில் தருகிறது.
6 காண்டங்களையும் 10346 செய்யுட்களையும் கொண்டுள்ளது. முருகன் பிறப்பு,கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டது. முருகன் திருவிளையாடல், சூரபது மனுடன் போரிட்டு வென்றது தேவர்களை காத்தது. வள்ளி தெய்வானைத் திருமணம் கூறப்பட்டுள்ளது.
பெருங்கதை சமண சமயக் காப்பியமாகும் ஆசிரியர் - கொங்கு வேளிர் பெண்களுக்குப் பொறுமையே பெருமை தரும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.