LANGUAGE ACROSS THE CURRICULUM கலைத் திட்டத்தில் மொழி Mr.N.SELVARAJU Assistant Professor of Mathematics
Unit-1 கலைத்திட்டத்தில் மொழியின் கருத்தாக்கம் மற்றும் கோட்பாடுகள்
குறிப்பு சட்டகம் முன்னுரை பொருள் கருத்து பரிமாணங்கள் இலக்கு கொள்கைகள் குறிக்கோள்கள்
முன்னுரை நவீன காலத்திற்கு ஏற்றாற் போல் மொழியின் கருத்தாக்கத்தையும், கோட்பாட்டையும் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியாக கலைத்திட்டத்தில் இணைப்பது சாலச் சிறந்தது ஆகும். மொழிச் சிக்கல்களைக் களைவதற்கு, மொழியின் கருத்தாக்கத்தையும், கோட்பாடுகளையும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் .
பொருள் கலைத்திட்டத்தில் மொழியின் நோக்கம் என்பது பாடத்தின் முக்கியப் பொருளடக்கத்தைப் புரிந்து கொள்ளத் தேவையான கல்வியறிவு மற்றும் திறன்கள் மாணவர்களிடம் உள்ளதா என்பதை உறுதி செய்தலாகும் . மூன்று பண்புகள் 1. மொழி 2. முழுவதும் 3. கலைத்திட்டம்
மொழி கருத்துகளைப் பரிமாற்றப் பயன்படும் கருவிஇரு நபர்களிடையே நடைபெறும் உரையாடல்குறியீடுகளின் தொகுப்புதகவல் தொடர்புக்கான வழிமக்களிடையே நடைபெறும் ஒரு செயல்பாடுதிறன்களின் தொகுப்பு
முழுவதும் கலைத்திட்டம் முழுவதும் மொழி
கலைத்திட்டம் ‘ கலைத்திட்டம் ’ என்ற வார்த்தையின் பொருள் , நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களை அடைவதற்காக பள்ளிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் செயல்பாடுகளின் தொகுப்பாகும் . கற்றலுக்கான அணுகுமுறை . மொழிக் கற்றல் என்பது , ஒவ்வொரு பாடத்திலும் , ஒவ்வொரு கற்றல் நடவடிக்கையிலும் மற்றும் முழுக் கலைத்திட்டத்திலும் நடைபெறுகிறது . மொழி வளர்ச்சியில் ஆசிரியர்களுக்கு பொறுப்பு . கலைத்திட்டத்தில் மொழி ’ என்பது மொழி ஆசிரியரின் மொழி வகுப்புகள் மூலம் மட்டுமின்றி,மற்ற பாடங்களின் வகுப்புச் சூழலில் மற்ற ஆசிரியர்களாலும் மொழித் திறனை வளர்க்க முயற்சிப்பதே ஆகும் .
கருத்து பல்வேறு பயிற்சியாளர்களால் உருவாக்கப்பட்ட பயனுள்ள கருத்தாகும் . கலைத்திட்டத்தில் உள்ள மொழி , பள்ளியில் உள்ள மொழிக் கல்வியின் பல்வேறு அம்சங்களை இணைப்பதோடு தொடர்புடையதாகிறது . மேலும் , இது மொழிப்பாடம் அல்லாத பிற பாடங்களில் உள்ள முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது . மொழிக் கற்றல் மற்றும் பொருளடக்கக் கற்றலையும் இது ஒருங்கிணைக்கிறது .
பரிமாணங்கள் கருத்து கொள்கை தகவல் தொடர்புத் திறனை விட மொழி உயர்ந்தது . மொழியானது சிந்தனைச் செயல்முறையுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது . கருத்துருவாக்கம் மற்றும் தகவலை இணைப்பதற்கான ஒரு கருவியாகும் . மொழியானது மனச் செயல்பாடுகள் மற்றும் அறிவாற்றலின் துல்லியத்தை ஆதரிக்கிறது .
. அறிவாற்றல் சார்ந்த பணிகளுக்கும் அவற்றின் தீர்வுகளுக்கும் இடையே ஒரு பாலமாக மொழி செயல்படுகிறது .
* பள்ளி மற்றும் கல்வி அமைப்பிற்கு இடையேயுள்ள கலைத்திட்டத்தில் மொழியானது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகிறது .
இலக்குகள் பள்ளியில் , கற்றல் செயல்பாட்டில் மொழி வளர்ச்சியை ஏற்படுத்துதல் . கற்றலில் ஆதரவு மற்றும் வெற்றிபெற ஊக்குவித்தல் . கேட்டல் , பேசுதல் , படித்தல் மற்றும் எழுதுதல் போன்ற மொழியின் நான்கு திறன்களை மேம்படுத்துதல் . சிந்தனைச் செயல்முறையுடன் இணைக்கப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளது . புதிய கருத்தைப் பேசுவதைக் கேட்டல் , படித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றை மொழியுடன் ஒருங்கிணைத்தல் . கருத்தியல் சார்ந்த கல்வியறிவையும் வளர்த்தல் .
• மொத்தத்தில் குழந்தைகளின் மன மற்றும் மொழியியல் திறன்களை வளர்ப்பதே LAC இன் இலக்காகும் .
அடிப்படைக் கொள்கைகள் கோர்சனின் கருத்துப்படி : பயன்பாட்டின் மூலம் உருவாதல் . கற்றலில் அடிக்கடி பேசுதல் , எழுதுதல் , வடிவமைத்தல் மற்றும் இயக்குதல் போன்ற செயல்களை பயன்படுத்தல் . கற்றல் பெரும்பாலும் பேசுவதன் மூலமோ அல்லது எழுதுவதன் மூலமோ , வடிவமைத்தல் மற்றும் இயக்குவதன் மூலமோ நிகழ்கிறது என்பதை உணர்தல் . அறிவாற்றல் வளர்ச்சிக்கு மொழிப் பயன்பாட்டின் தேவையும் பங்களிப்பும் அவசியமாகும் . கற்போர் தமது கற்றலைப் பிரதிபலிக்கவும் , அதை மேம்படுத்தவும் உதவுகிறது .
குறிக்கோள்கள் ஒவ்வொரு குழந்தையின் மொழி வளர்ச்சிக்கு உதவுதல் . மொழிப் பயன்பாட்டின் அனைத்துத் தளங்களிலும் மொழி வளர்ச்சியை ஆதரித்தல் . பள்ளியில் ஒவ்வொரு கற்றல் நடவடிக்கையிலும் மொழி வளர்ச்சிக்கு உதவுதல் . பொருள் சார்ந்த கருத்துக்கள் மற்றும் வகைகளை மொழியின் மூலம் கொண்டு சேர்த்தல் . மொழிப் பயன்பாட்டின் மூலம் கற்றலுக்கான பல்வேறு உத்திகளை உருவாக்குதல்மொழி அறிவின் மீதான புரிந்துணர்தலை உருவாக்குதல் .
நோக்கங்கள் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுதல் . மொழியியல் திறன்களை மேம்படுத்துதல் . பாடக் கருத்துகளை மிகவும் திறம்பட விவாதித்தல் . மொழியியல் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குதல் . மொழியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல் . மொழியியல் திறன்களை மேம்படுத்துதல் .
கலைத்திட்டத்தில் மொழியின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் பள்ளியில் கலைத்திட்ட மொழியின் நன்மைகள் : பள்ளிக் கட்டமைப்பை மறுசீரமைக்க பள்ளிப் பாடத்திட்டத்தில் மொழியைப் பயிற்றுவிப்பில் நிலைத்த தன்மையை ஊக்குவித்தல் . ஆசிரியர்களுக்கு கலைத்திட்ட மொழியின் நன்மைகள் : ஆசிரியர்கள் தங்கள் பாடத்திட்டத்தை மிகவும் திறம்படத் தயாரிக்க உதவுகிறது . அனைத்து ஆசிரியர்களும் பிற நாட்டு மொழியில் தங்கள் திறமைகளை மேம்படுத்த முடியும் . ஆங்கில மொழியில் உள்ள பொருளடக்கத்தைக் கற்பிக்க ஆங்கில ஆசிரியர்களுக்கு உறுதுணையாய் உள்ளது . ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்த உதவுதல் . ஆசிரியர்கள் ஆங்கில மொழியில் தெளிவான வழிமுறைகளை மாணவர்களுக்கு வழங்க உதவுகிறது .
மாணவர்களுக்கு கலைத்திட்ட மொழியின் நன்மைகள் : . பாடத்தின் பொருளடக்கத்தை சிறப்பாகக் கற்க வழிவகுக்கும் . மேலும் கற்பித்தல் மொழியை மாணவர்களின் தன்மைக்கேற்ப மாற்றிக்கொள்ள உதவும் . கற்போர் ஆங்கில மொழியில் தமது தொடர்புத் திறனை மேம்படுத்த உதவுகிறது . பாடம் சார்ந்த கருத்துகளுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்நுட்பச் சொற்களைப் மாணவர்களுக்கு உதவுகிறது . புரிந்துகொள்ள இது ● மொழி மற்றும் உள்ளடக்க அறிவானது ஒன்றோடொன்று இணைந்திருப்பதை மாணவர்கள் கண்டறிய உதவுகிறது . மாணவர்கள் பொருளடக்கத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவுகிறது . மாணவர்களுக்கு சிந்தனையை விரிவுபடுத்த உதவுகிறது . ஆங்கில மொழியில் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க மாணவர்களுக்கு உதவுகிறது .
• வெவ்வேறு பாடங்களுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த சொற்களை அறிந்து கொள்ளகற்பவர்களுக்கு உதவுகிறது . மாணவர்களுக்கு ஒரு பரந்த தொழில் உலகத்தைப் பற்றிய அறிவை வழங்குகிறது . வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில உதவுகிறது .
• பயனுள்ள சுய ஆய்வு செய்யவும் மற்றும் பிற மொழித் தொடர்புகளைத் தக்க வைப்பதிலும் உதவுகிறது .
கலைத்திட்டத்தில் மொழியின் சிரமங்கள் . LAC –ன் செயலாக்கம் குறித்த அறிக்கைகளோ மேலும் அது தொடர்பான ஆவணங்களோ கிடைக்கவில்லை.
. LAC பற்றி மிகக் குறைவான ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
LAC செயல்களுக்கு தலைமை ஆசிரியரையோ அல்லது பள்ளியையோ தவிர, வேறுயாரும் இல்லை என்பதும் மற்றொரு தடையாக இருக்கிறது.
LAC-யை வளர்க்க மத்திய,மாநில அரசிடம் எந்த மொழிக் கொள்கையும் இல்லை.
LAC-யை அறிமுகப்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் அணுகுமுறையிலும் ஆர்வத்திலும் தீவிர மாற்றம் தேவைப்படுகிறது.
ஆசிரியர்களின் அணுகுமுறையில் சிக்கல்கள் ஏற்படுகிறது .